மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் தற்கொலை - வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்
பிரபல மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் கொச்சியில் உள்ள அவரது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள் இதோ...
மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ 26 வயதை நிரம்பியவர். ஆலப்புழாவைச் சேர்ந்த ஷெரின் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த மே17 ஆம் தேதி காலை அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஷெரின் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து மர்ம மரணம் என்று வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடத்தில் கிடைத்த தடையங்களைச் சேகரித்துக் கொண்டபின், ஷெரினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷெரினின் இறப்பு கேரள மாநிலம் முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முன், நண்பர்கள் இடையே ஏற்பட்ட ஒரு சில பிரச்சினைகள் காரணமாக ஷெரின் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். மேலும், தனது இணையதள கணக்குகளில் மனவருத்தத்துடன் பல பதிவுகள் பகிர்ந்துள்ளதும் தெரியவந்தது. தொடர்ந்து கொச்சி பாலேரி வட்டம் போலீசார் ஷெரினுக்கு நெருக்கமானவர்கள் சிலரிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். அதில், ஷெரினுக்கு ஒரு காதலன் இருப்பது குறித்து தெரியவந்தது. காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கினர். அதற்கிடையே, ஷெரினின் காதலன் என்று சொல்லப்பட்டவர் தலைமறைவு ஆகியுள்ளார். தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர். ஷெரினின் காதலன் போலீசில் பிடிபட்ட பின்னரே, ஷெரினின் இறப்பில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம் - என்ன ஆச்சு?
கடந்த மே 12ஆம் தேதி, மலையாள மாடலும் நடிகையுமான சஹானா அவரது வீட்டு ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சஹானாவின் தற்கொலை கேரள திரைத்துறையில் ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்குவதற்குள் ஷெரினின் தற்கொலை மீண்டும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கடல் அலையில் பாறை மீது தவறி விழுந்த டிடி அக்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104