பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம் - என்ன ஆச்சு?

பிரியங்கா சோப்ரா முகத்தில் இருக்கும் காயம் எப்படி ஆனது? என்பது குறித்து ரசிகர்கள் தேடி வருகின்றனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2022, 06:57 PM IST
  • லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்ட பிரியங்கா சோப்ரா
  • முகத்தில் பல காயங்கள் இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி
  • பிரியங்கா சோப்ராவுக்கு என்ன ஆச்சு? என கேள்வி
பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம் - என்ன ஆச்சு?  title=

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது. முகத்தில் ரத்தக்காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருப்பதால், அவருக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், ஒரு படத்தின் சூட்டிங்கிற்காக பிரியங்கா சோப்ரா எடுத்த புகைப்படம் தான் அது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க | துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்..ரஜினியை முந்திய கமல்ஹாசன்!- வேற லெவல் ‘விக்ரம்’!

சைட்டடல் என்ற சயின்ஸ் பிக்சன் வெப் தொடரில் அவர் நடித்து வருகிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் மேட்டுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா தயாரிக்கும் இந்த தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ரூசோ சகோதரர்கள் இயக்குகின்றனர். அமேசான் பிளாட்ஃபார்மில் வெளியாகும் இந்த தொடரின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரியங்கா சோப்ரா இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை தான் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். உங்களின் வேலை நாட்கள் கடிமாக இருந்துள்ளதா? என்ற கேள்வியுடன் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka (@priyankachopra)

படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒப்பனை என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.  அண்மையில் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் ஆகியோர் தங்களின் குழந்தையை உலகுக்கு அறிமுகப்படுத்தினர். அப்போது, தங்களுடைய குழந்தை 100 நாட்களுக்கு மேல் ஐசியூவில் இருந்ததை தெரிவித்தனர். இதுகுறித்து பிரியங்கா சோப்ரா எழுதிய பதிவில், " ஒவ்வொரு குடும்பத்தின் பயணமும் தனித்தன்மை வாய்ந்தது மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிலான நம்பிக்கை தேவைப்படுகிறது. கடந்த சில மாதங்கள் எங்களுக்கு சவாலாக இருந்தது. அதேநேரத்தில் அந்த நேரங்கள் மதிப்பு மிக்கவை. எங்களின் அடுத்த அத்யாயம் இப்போது தொடங்குகிறது" எனத் தெரிவித்திருந்தார். கடைசியாக தி மேட்ரிக்ஸ் ரீசர்ரெக்ஷன்ஸில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். 

மேலும் படிக்க | ‘டான்’ வெற்றிக் கொண்டாட்டம்- பிரியங்கா மோகன் கலந்துகொள்ளாதது ஏன்?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News