கேரளா மாநிலம் மலப்புரத்தில் ஹம்சா என்ற இளைஞர் வசித்து வருகிறார். தற்பொழுது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து, பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியாக உள்ளது, இதனால் பல விபத்துகள் நடக்கிறது. மேலும் சாலை சரி இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த அவல நிலை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நினைத்த ஹம்சா,  சாலையில் உள்ள பள்ளத்தில் நின்று குளித்தும், துணிகளை துவைத்தும் அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலப்புரம் பாண்டிக்காடு சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் உள்ள அனைத்து சாலைகளின் நிலையும் இதுதான் என்கிறார் அந்த இளைஞர். பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து ரோடுகளும் தார் போடப்பட்டது. ஆனால் மீண்டும் பள்ளங்கள் உருவாகின.  இதை எப்படி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்று யோசித்த போது தான் கீழே இறங்கி குளிக்கலாமா என்ற எண்ணம் வந்தது.