WhatsApp, Facebook போன்ற சமூக ஊடகங்களின் உதவியோடு கேரளாவில் பாலியல் தொழில் வலுப்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் Kerala State AIDS Control Society (KSACS) மூலம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கிடைக்கப்பெற்ற முடிவானது... WhatsApp, Facebook போன்ற சமூக ஊடகங்களின் உதவியோடு கேரளாவில் பாலியல் தொழிளாலர்கள் தங்கள் தொழிலை வலுப்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றது.


KSACS என்பது கேரளாவை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகும். KSACS இயக்குனர் திரு ரமேஷ் அவர்கள் இதுகுறித்து தெரிவிக்கையில்... கேரளாவில் இருக்கும் பாலியல் தொழிளாலர்களுக்கு தொடர்ச்சியாக மருத்துவ உதவி அளித்து அவர்களுக்கு பால்வினை வராமல் தடுத்துவருகின்றோம். 


இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், வருமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்கள் வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.


சிலர் ஆடம்பர வாழ்க்கையினை வேண்டி, பகுதிநேர பாலியல் தொழிளாலர்களாகவும் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களிடன் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்... கேரளாவில் 15802 பெண்கள் 11707 ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களில் 2 பெண் மற்றும் 10 ஆட்களிடம் இருந்து HIV நோய்கான கிருமி கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்!