திருவனந்தபுரம்: நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) தனது புதிய அமைச்சரவையை திங்கட்கிழமை அறிவித்தார். இந்த புதிய அமைச்சரவையில், கேரள வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தில் அமைச்சரான முதல் இந்தியர் என்ற பெருமையுடன் பதவியேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

41 வயதான அவர் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.


சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் கொச்சியின் பராவூராகும். அங்கு அவரது தாத்தா மருத்துவ நிபுணராக இருந்தார். அவர் ஒரு கம்யூனிஸ்டு அபிமானி ஆவார்.


ஆக்லாந்தில் (Auckland) இருந்து இரண்டு முறை எம்.பி. பதவி வகித்த பிரியங்கா, தனது உயர் படிப்பைத் தொடர நியூசிலாந்துக்கு (New Zealand) சென்றார். அங்கு இருக்கும்போது அவர் கிறிஸ்ட்சர்ச்சை சேர்ந்த ரிச்சர்ட்சன்னை திருமணம் செய்து கொண்டார். 2004 முதல் அவர் தொழிற்கட்சியுடன் (Labour Party) இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டார்.


ALSO READ: துருக்கியில் Aegean கடலில் 7.0 ரிக்டர் அளவில் Earthquake, 4 பேர் பலி, 120 பேர் காயம்


கடந்த ஓணம் பண்டிகையின் போது, பிரியங்கா, நியுசிலாந்து பிரதமர் ஆர்டணுடன் நேரலையில் கேரள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்குப் பிறகு அவர் கேரளாவில் மிகவும் பிரபலமானார்.


மலையாள பாடல்களுடனான பிரியங்கா ராதாகிருஷ்ணனின் காதல் இன்னும் தொடர்கிறது. பிரபல கேரள பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ்தான் (KJ Yesudoss)  தனக்கு பிடித்த பாடகர் என்கிறார் நியுசிலாந்து அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன்.


ALSO READ: டிரம்பின் தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொண்ட 700 பேர் பலி அதிர்ச்சித் தகவல்!