பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு, 2014 அக்டோபர் மாதத்தில் இருந்து, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று, வானொலியில், தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மான் கி பாத்’ மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடியின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத் நிகழ்ச்சியில், பிரதமர் ஆற்றிய உரையில் முக்கிய அம்சங்கள்: 


- மொழி என்பது தகவல் தொடர்புக்கு மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மேலும் படிக்க | வங்கதேச சுதந்திர போராட்டம் எனது வாழ்நாளின் முதல் போராட்டம்: பிரதமர் மோடி


- பண்டிகைகளின் போது உள்ளூர் பொருட்களை வாங்குமாறு குடிமக்களை பிரதமர் மோடி வலியுறுத்தினார். “பண்டிகைகளான சிவராத்திரி, ஹோலி நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அனைவரும் உள்ளூர் தயரிப்பாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்கி   ‘Vocal for Local’ என்னும் இயக்கத்திற்கு  வலு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த பண்டிகைகளை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள் ஆனால் அதே சமயத்தில் தொற்று பரவல் குறித்து எச்சரிக்கையாக இருக்க மறக்காதீர்கள்" என்றார்


மேலும் படிக்க | உலக வானொலி தினத்தில் ‘மக்களை இணைக்கும் அற்புதமான ஊடகம்’ என பிரதமர் வாழ்த்து


- சர் சி வி ராமனுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பாராட்டத்தக்கது. அவர்களின் கடின உழைப்பால், இந்தியாவில்  தடுப்பூசி தயாரிப்பது சாத்தியமானது," என்றார்.


- கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்காவுடனான சந்திப்பை பிரதமர் மோடி குறிப்பிட்ட பிரதமர் மோடி, சந்திப்பு மிகவும், "சுவாரஸ்யமானது மற்றும் உணர்வு பூர்வமானது" என்று விவரித்தார்.


-  பிரதமர் நரேந்திர மோடி, தான்சானிய TikTok நட்சத்திரங்களான கிலி மற்றும் நீமா, இந்தியப் பாடல்களுக்கு  திறமையாக உதட்டு அசைவுகள்  கொடுத்து பாடியதை பாராட்டியதோடு,  தாய்மொழிகளின் முக்கியத்துவம் பற்றி பேசினார்.


- 2014க்குப் பிறகு, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க சிலைகள், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சிலைகளை இந்தியா கொண்டு வந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.


மேலும் படிக்க | Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR