Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா

பள்ளியின் சீருடை கட்டுப்பாட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 10:58 PM IST
  • ஹிஜாப் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து
  • நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்
  • நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரை மாணவிகள் ஹிஜாப் அணிய தடை
Amit Shah on Hijab: நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் - அமித் ஷா  title=

புதுடெல்லி: ஹிஜாப் சர்ச்சை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீதிமன்ற உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும்

பள்ளியின் சீருடை கட்டுப்பாட்டை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை பூகம்பாக வெடித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். 

பள்ளி மாணவ, மாணவியருக்குத்தான் ஆடை கட்டுப்பாடு உள்ளது இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது எனவே, இந்த விவகாரத்தில் வேறு எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்து இளைஞர் படுகொலை; ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு அமல்!

உள்துறை அமைச்சர், 'அனைவருக்கும் ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பது எனது கருத்து' என்றார்.

ஹிஜாப் சர்ச்சைக்கு மத்தியில் அனைத்து மதத்தினரும் பள்ளிகளின் ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டுள்ளார். 

செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அமித் ஷா கூறுகையில், பள்ளிகளின் சீருடை அறிவுறுத்தலை அனைத்து மதத்தினரும் பின்பற்ற வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். மத நம்பிக்கைகளை கல்வி நிறுவனங்களில் இருந்து பிரிக்க வேண்டும் என்று ஷா கூறினார்.

ஹிஜாப் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பு
சமூக வலைதளங்களில் ஹிஜாப் அணிவது தொடர்பான வாத விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. 

இந்தியாவில் வெடித்திருக்கும் ஹிஜாப் சர்ச்சை, பாகிஸ்தானிலும் பிரதிபலிக்கிறது. பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள் முதல் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் வரை ஹிஜாபை ஆதரித்துள்ளனர். சமூக ஊடகங்களில் ஹிஜாபை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் உள்ளனர், சிலர் அதை எதிர்க்கின்றனர்.

இடைக்கால உத்தரவு ஹிஜாப் தடை

முன்னதாக, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் சர்ச்சையைக் கருத்தில் கொண்டு, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவஸ்தி, நீதிபதி ஜே.எம்.காஜி மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இதில் இறுதி உத்தரவு வரும் வரை மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News