பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார்  மாநிலம் தர்பாங்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக  இருந்துவந்தவருமான கீர்த்தி ஆசாத், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி பாஜக கட்சியிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.


இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைவது என முடிவெடுத்த அவர்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முன்னிலையில் இன்று தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், ராகுலுக்கு, மிதிலா ஸ்டைலில் மாலை மற்றும் பிங்க் கலர் தொப்பி அணிவித்த, கீர்த்த ஆசாத், தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். 



பீகார் மாநிலம் தர்பாங்கா தொகுதியில் இருந்து, பா.ஜ.க., சார்பில் போட்டியிட்டு, 3 முறை வெற்றி பெற்று, எம்.பி.,யாக தேர்ந்தடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.