விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என பிரதமர் மோடி ஆனால் ஒன்றும் நடக்க வில்லை என மோடி மீது ராகுல் தாக்கு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேளாண் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் சங்கத்தினைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் இன்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த போவதாக அறிவித்திருந்தன. அதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் திரண்டுள்ளனர்.


விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆம்ஆத்மி, காங்கிரஸ் போன்ற பல கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து 207 விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டனர். இதையடுத்து, சுமார் 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகப்புபனியில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, தேசியமாநாட்டு கட்சியை சேர்ந்த பரூக்அப்துல்லா, லோக்ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், சமாஜ்வாடி கட்சி சார்பில் முக்கிய நிர்வாகிகள், டில்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மற்றும் பலர் பங்கேற்றனர். 


இதை தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், இன்று நடக்கும் போராட்டம் விவசாயிகளின் எதிர்காலத்திற்கான போராட்டம் ஆகும். மோடி அரசு விவசாயிகள் பிரச்சனையை பொருட்டாக மதிக்கவில்லை. மாறாக அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு உதவி வருகிறது. பணக்காரர்களின் கடனை மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. விவசாயிகள் தங்களின் உரிமைக்காக போராடுகின்றனர்.



விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்த்தப்படும் என பிரதமர் மோடி கூறினார். போனஸ் வழங்கப்படும் என்றார். இப்போது நிலையை பாருங்கள். வெற்றுப்பேச்சுக்களால் ஒன்று ஆகவில்லை. ஒன்றையும் அவர் நிறைவேற்றவில்லை. தொழில் அதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 



நாட்டில் தற்போது 2 பெரிய பிரச்சனை உள்ளது. அதில் ஒன்று விவசாயிகள் பிரச்சனை, மற்றொன்று வேலை வாய்ப்பு. ஆனால், அரசால் விவசாயிகளும் இளைஞர்களும் புறக்கணிக்கப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு துணை நிற்கும். அவர்களின் பிரச்சனையை தீர்ப்போம் இவ்வாறு ராகுல் பேசினார்.