புதுடெல்லி: இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) மற்றும் SBI கார்டு (SBI Card) ஆகியவை இணைந்து, RuPay தளத்தில் IRCTC SBI Card-ஐ அறிமுகப்படுத்தியுள்ளன. இது அவ்வப்போது பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு சலுகைகளை அளிக்கும் நோக்கத்துடன் மெற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கார்ட், இந்திய ரயில்வேயில் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தின் அதிகபட்ச சேமிப்புகளையும், வாங்கும் நுகர்வுப் பொருட்கள், உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் சிறந்த சலுகைகளையும், பரிவர்த்தனை கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.


இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?


எஸ்பிஐ வலைத்தளத்திற்கு செல்லவும்:


https://www.sbicard.com/eapply/eapply-form.page/apply?path=personal/cred...


உங்கள் தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண், முகவரி ஆதாரம் போன்றவற்றை உள்ளிட்டு செலக்ட் செய்யவும்.


இதில் கிடைக்கும் நன்மைகள் என்ன?


RuPay தளத்தில் IRCTC SBI Card-ஐ வைத்திருப்பவர்களுக்கு, IRCTC இணையதளத்தில் செய்யப்படும் AC1, AC2, AC3, AC CC முன்பதிவுகளில் 10 சதவீதம் வரை திரும்பக் கிடைக்கும் (Value Back). கார்ட் செயலாக்கத்தின் போது, இந்த கார்ட், 1 சதவீத பரிவர்த்தனை கட்டண தள்ளுபடி (Transaction Fee Waiver) மற்றும் 350 போனஸ் வெகுமதி புள்ளிகளையும் (Bonus Reward Points) வழங்குகிறது. கார்ட்டில் பெறப்பட்ட ரிவார்ட் புள்ளிகளை IRCTC இணையதளத்தில் இலவச டிக்கெட்டுகளை வாங்க பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கார்டில் நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. வசதியான, பாதுகாப்பான மற்றும் வேகமான பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை பாதுகாப்பான ரீடரில் டேப் செய்தால் போதும். இந்த அறிமுகத்தின் மூலம், SBI கார்டு RuPay நெட்வொர்க்கில் தனது போர்ட்ஃபோலியோவை விரிவாக்கியுள்ளது.


ரயில் பயணத்தில் கிடைக்கும் சேமிப்போடு, IRCTC SBI Card ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. பிக் பாஸ்கெட், ஆக்ஸி, ஃபுட்ஃபோர்ட்வெல்.இன், அஜியோ போன்றவற்றில் ஷாப்பிங் செய்யும் போது வாடிக்கையாளர்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடியைப் பெறலாம். ஆரோக்கியத்திலிருந்து பொழுதுபோக்கு வரை, RuPay தனது வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடியான நன்மைகளை அளிக்கிறது.


ALSO READ: UPI, RuPay பரிவர்த்தனைகளில் வசூலித்த கட்டணங்களை வங்கிகள் திருப்பித் தர வேண்டும்!!


Medlife-ல் மருந்துகளுக்கு 20 சதவீதம் தள்ளுபடி, ஃபிட்டர்னிட்டியில் 25 சதவீதம் தள்ளுபடி, Hungama Music-க்கு ஒரு மாத கட்டணம் ரூ .1 மட்டுமே என்ற சலுகை, Me N Moms-ல் 250 ரூபாய் தள்ளுபடி ஆகியவை RuPay வழங்கும் அதிரடி சலுகைகளின் சில உதாரணங்களாகும். RuPay தனது வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு நன்மைகளையும் அளிக்கின்றது.


நோயியல் மீதான செலவுகளில் 40 சதவிகிதம் தள்ளுபடி, 1Mg-ல் வாங்கும் மருந்துகளுக்கு 18 சதவிகிதம் தள்ளுபடி, எந்த ஒரு UpGrad கோர்சுக்கும் 10 சதவிகிதம் கட்டண தள்ளுபடி, The Man Company-ல் செய்யும் ஷாப்பிங்கில் 250 ரூபாய் தள்ளுபடி மற்றும் Mamaearth மற்றும் Apollo Pharmacy-ல் தலா 10 சதவீதம் தள்ளுபடி ஆகியவை இதில் கிடைக்கும் சில தவிர்க்கமுடியாத சலுகைகளாகும்.


வாடிக்கையாளர்களுக்கு ஆல்ரவுண்ட் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் வழங்க, கார்ல்டன், அரிஸ்டோக்ராட், விஐபி, ஸ்கை பேக் மற்றும் கேப்ரீஸ் ஆகியவற்றில் ஷாப்பிங் செய்யும் போது RuPay 10 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது.


RuPay அட்டைதாரர்களுக்கும் Myntra-வில் 300 ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். Cuemath-ல் 15 சதவீதம் தள்ளுபடி, பாட்டாவில் 25 சதவீதம் தள்ளுபடி, ரயிலில் செல்லும்போது ரெயில் ரெசிபியில் ஆர்டர் செய்தால் அதில் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் Adda247-ன் All Test Series-ல் 50 சதவீதம் தள்ளுபடி என்று தள்ளுபடிகளின் சங்கிலியாக RuPay-ன் ஆஃபர்கள் உள்ளன.


ALSO READ: வீட்டுத் திட்டத்தை மலிவாகக் கொண்டு வந்தது ICICI வங்கி, இனி வீட்டிலிருந்து பிளாட் பார்க்க முடியும்