இந்தியா-சீனா எல்லை தகராறு தொடர்பாக லடாக்கில் (Ladakh)  நடந்து வரும் மோதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. முதலில் கால்வன் பகுதியிலும் பின்னர் சுசுல் பகுதியிலும் சீனா மேற்கொண்ட அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு பிறகு, இப்போது ரெசாங் லா (Rezong La) பகுதியிலும் மோதல் ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரெசாங் லா பகுதியில் சென்ற வாரம் சீன (China) வீரர்கள் கிழக்கு லடாக்கில் இங்குள்ள சில முக்கியமான சிகரங்களை ஆக்கிரமிக்க செய்த முயற்சிகளை நமது வீரர்கள் முறியடித்தனர். இதே ரெசாங லாவில் தான், 1962 ஆம் ஆண்டு போரில் இந்திய வீரர்கள் சீன இராணுவத்துடன் கடுமையாக போராடி மீட்டனர்.


நவம்பர் 1962 இல், 18000 அடி உயரத்தில் ரெசாங் லா போரில் மேஜர் ஷைத்தான் சிங் (Major Saitan Singh) தலைமையில் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது.


18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த ரோசாங் லா பகுதியில் 1962 நவம்பர் போரில், 124 இந்திய வீரர்கள், மிக அதிக எண்ணிக்கையில் இருந்த சீன துருப்புக்களுடன் போராடினர். 


இந்திய இராணுவம் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையில் போராடி வெற்றி பெற்று, தனது வீரக்கதையை வரலாற்றில் பொறித்துள்ளது. மேஜர் சிங் தனது கடைசி மூச்சு வரை சீன இராணுவத்திற்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பை ஏற்படுத்தியிருந்தார்.


போர் நடந்த  மூன்று மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்திய வீரர்களின் பனி மூடிய உடல்களில், வீரக்கதை எழுதப்பட்டிருந்தது. ஆம்,  இறந்த பிறகும் துப்பாக்கிகளை கெட்டியாக பிடித்து கொண்டிருந்தன அந்த கைகள். ராணிக்கேட்டில் உள்ள குமாயூன் ரெஜிமென்டல் சென்டர், 2005 ஆம் ஆண்டு, இமேஜஸ் ஆஃப் வேலோர் அண்ட் ட்ரையம்ப் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தில், 1962 நவம்பர் 18 அன்று சீனப் படை இந்திய துருப்புக்களின் துப்பாக்கி எல்லைக்குள் வந்தவுடன், மேஜர் தனது படைகளுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுத்தார் என எழுதப்பட்டுள்ளது.


ALSO READ | கல்வான் தாக்குதல்: 60 சீன படையினர் கொல்லப்பட்டது அம்பலம்..!!!


பல எதிரி படையினர் வீழ்த்தப்பட்டனர். நம்மிடம் ஆயுதங்கள் பெரிய அளவில் இல்லை என்றாலும், வீரங்களிடம் வீரம் துணைவு என்னும் ஆயுதம் இருந்தது. அது எதிரிகளை வீழ்த்த காரணமாக இருந்தது.


நமது படைகள் நாலா புறமும் எதிரி படைகளால் சூழப்பட்ட போதிலும், வீரதீரம் மிக்க மேஜர் சிங்கின் தலைமையில் வீரர்கள் தங்கள் திறமையினாலும் வீரத்தினாலும், சீனா ராணுவத்திற்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்தினர்.


ராணுவ ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை கைப்பற்றியதற்காக மேஜர் ஷைத்தான் சிங் மரணத்திற்குப் பின் நாட்டின் மிக உயர்ந்த விருதான பரம்வீர் சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.


 ALSO READ | எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. கடும் குளிர் காலத்திற்கு தயாராகும் துருப்புகள்..!!!