இந்தியாவிற்கு வர தயாராகும் மாடர்னா; பைசர் மற்றும் பிற தடுப்பூசிகள் நிலை என்ன?
Moderna தடுப்பூசி இந்தியாவிற்கு வர தயாராகி வரும் நிலையில், இந்தியாவிற்கு விரைவில்; கிடைக்க உள்ள தடுப்பூசிகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மாடர்னா (Moderna) தடுப்பூசி இந்தியாவிற்கு வர தயாராகி வரும் நிலையில், இந்தியாவிற்கு விரைவில்; கிடைக்க உள்ள தடுப்பூசிகள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சிப்லா (Cipla), இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய, சில நாட்களுக்கு முன் இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. அஸ்ட்ராஜெனெகா - சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்ட் (Covishield), பாரத் பயோடெக்கின் கோவாக்சின் (Covaxin) மற்றும் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தயாரித்த ஸ்பூட்னிக் வி (Sputnik V) ஆகியவற்றிற்குப் பிறகு, இந்தியாவில் பயன்படுத்த உள்ள நான்காவது தடுப்பூசி மாடர்னாவின் தடுப்பூசி ஆகும்.
பைசர் (Pfizer) தடுப்பூசி விரைவில் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று அரசு சமீபத்திய செய்தியாளர் சந்திப்புகளில் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கோவிட் -19 தடுப்பூசிக்கு இந்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக, கடந்த ஜூன் மாதம் கூறினார். ஒப்புதல் பெற்ற பின், இந்த ஆண்டுக்குள் பைசர் நிறுவனம் இந்தியாவுக்கு 10 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும் என கூறப்படும் நிலையில், விரைவில் இதற்கு ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா தனது நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளை தவிர வேறு பல தடுப்பூசிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன
இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும்/ கிடைக்க உள்ள தடுப்பூசிகள் பின்வருமாறு:
1. கோவிஷீல்டு (Covishield) தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் (SII) தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி தான் இப்போது பெருமளவில் போடப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது.
2. கோவேக்சின் (Covaxin) தடுப்பூசியை ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தத் தடுப்பூசியும் கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
3. ஸ்புட்னிக்-வி (Sputnik V) தடுப்பூசியை ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தயாரித்து அளிக்கிறது. தற்போது இறக்குமதி செய்யப்படு வரும் போதிலும், ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் தயாரித்து வழங்க போகிறது. இந்தத் தடுப்பூசி கிட்டத்தட்ட 90 சதவீத செயல்திறனைக்கொண்டுள்ளது.
4. பாரத் பயோ டெக் நிறுவனம் மூக்குவழியே செலுத்தும் தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வருகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற தடுப்பூசியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ | COVID-19: ரஷ்யாவில் தீயாய் பரவும் கொரோனா; தடுப்பூசி தயக்கம் தான் காரணமா?
5. நோவாவேக்ஸ் தடுப்பூசியை அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியையும் இந்தியாவில் புனேயின் இந்திய சீரம் நிறுவனம் (SII) தயாரித்து வழங்கும். இந்தியாவில் இதன் பெயர் கோவோவேக்ஸ் என அறியப்படுகிறது. இதுவும் பரிசோதனை கட்டத்தில் உள்ளது
6. ஜைடஸ் கேடிலா (Zydus Cadila) நிறுவனம் டி.என்.ஏ. தடுப்பூசியை தயாரிக்கும். இதன் பரிசோதனையும் நடந்து வருகிறது. இது கோவேக்சினுக்கு பிறகு உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 2-வது தடுப்பூசி என்ற பெயரைப் பெறும்.
7. பயாலஜிக்கல் இ Biological E தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் தயாரித்து வழங்கும். ஆகஸ்டு மாதம் இது பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
8. புனேயில் உள்ள ஜெனோவா (Gennova) நிறுவனம் எம்.ஆர்.என்.ஏ. (mRNA) தடுப்பூசியை தயாரித்து அளிக்கும். ஆனால், இதன் பரிசோதனை இனிமேல் தான் தொடங்க வேண்டும்.
Also Read | ICMR: டெல்டா வைரஸில் இருந்து யாருக்கு அதிக பாதுகாப்பு உண்டு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR