புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், இந்தியாவின் விமான போக்குவரத்து துறை பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது, மேலும் பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுநோய பரவலை கடுப்படுத்துவதற்காக விமான நிறுவனங்கள் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளுடன் இயங்குவதால் உள்நாட்டு விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறு மாதங்களுக்கும் மேலாக முதல் முறையாக தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சம் என்ற அளவை விட குறைந்துவிட்டதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Corona) பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இந்தியாவில் இருந்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் பயணிகளுக்கான சர்வதேச விமான சேவைகள் கடந்த மார்ச் முதல் தடை செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத் மிஷனின் கீழ் சிறப்பு விமான சேவைகள் மட்டுமே செயல்பட்டு வந்தன.


 இருப்பினும், இந்த ஆண்டு COVID-19 தொற்று பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவில் இருந்து மேற்கொள்ளும் பயணத்திற்கு தடை விதித்துள்ளன. உள்நாட்டு விமானங்களும் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த பிரபலமான இடங்களுக்கு தங்கள் விமான சேவைகளை குறைத்துள்ளன.


ALSO READ | குறைந்த செலவில் ISRO உருவாக்கியுள்ள நவீன வெண்டிலேட்டர்கள்


இந்தியாவில் சர்வதேச விமானங்கள் எப்போது தொடங்கும்?
மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சர்வதேச பயணிகளுக்கான விமானத் தடையை மே இறுதி வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், விமான போக்குவரத்து துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.சி.ஏ), தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில், நிலைமையை பொறுத்து, உரிய அனுமதியுடன்  விமானங்களை  இயக்க அனுமதிக்கலாம் என்று கூறினார். இந்தியா தற்போது 27 நாடுகளுடன் இருதரப்பு ஏர் பப்பிள் ( air bubble ) ஒப்பந்தத்தை கொண்டுள்ளது.  இருப்பினும், பல நாடுகள் தற்போது  இரண்டாவது அலை தொற்று பரவலால், இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளனர். எனக் கூறினார்.


ஏர் இந்தியா மே 17 முதல் லண்டனில் இருந்து மும்பைக்கு சர்வதேச விமானங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், மே 18, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் சேவைகள் இயங்காது.
இந்தியாவில்  உள்ள ஆஸ்திரேலிய குடிமக்களுக்காக ஆஸ்திரேலிய அரசு வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் சேவையை தொடங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மரைஸ் பெய்ன் தெரிவித்துள்ளார். இந்த ஆஸ்திரேலிய விமானத்தில், இந்தியாவிற்கான உயிர்காக்கும் ஆக்ஸிஜன் கருவிகள் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நிச்சயம் வெல்வோம்: பிரதமர் மோடி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR