கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை, படுக்கைகள் என்பதுடன் கூடவே, வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது.
ஆக்சிஜனுக்காக பலர் மணி கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கும் நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது. டெல்லி, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மிகக் குறைந்த விலையில் திறன் மிக்க 3 வகை வெண்டிலேட்டர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இது குறித்து ஜீ மீடியாவிடம் பிரத்யேகமாக உரையாடிய, திருவனந்தபுரம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம்நாத், "இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் WHO தரத்திற்கு வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன, வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மென்பொருள், போன்ற அனைத்தும் நம் இளம் விஞ்ஞானிகளால் உள்நாட்டில் உருவாக்கப்படுகின்றன.
ALSO READ | மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி
ஆனால் இந்த தொழில்நுட்பம் மக்கள் நலனை கருதி இலவசமாக வழங்கப்படும். இந்த தொழில்நுட்பம் தொழில்நுட்ப ரீதியாக திறமையான தொழில் துறைகளிடம் ஒப்படைக்கப்படும். மேலும் பலர் ஏற்கனவே எங்களை அணுகியுள்ளனர். எனவே இது ஒரு வாரத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறினார்.
இந்த உபகரணங்கள் ஒரு வருடம் வரை இடைவிடாது செயல்பட முடியும். இதனை தொடர்ந்து பயன்படுத்த சந்தையில் எளிதில் கிடைக்கும் ரசாயனத்தை மாற்றினால் போதும்
நிமிடத்திற்கு 10 லிட்டர் ஆக்ஸிஜனை வழங்கும் திறனுடன் கூடிய இந்த கருவியின் உதவியுடன், ஒரே நேரத்தில் இரண்டு சாதாரண நோயாளிகளுக்கு அல்லது திவீர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்க முடியும். இந்த வகை கருவியின் முன்மாதிரி ஏற்கனவே VSSC மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதற்கு ரூ .50,000 க்கு மேல் செலவாகாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ALSO READ | கண்ணுக்கு தெரியாத எதிரியுடனான போரில் நிச்சயம் வெல்வோம்: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR