Vettaiyan Movie News Latest Updates: நடிகர் ரஜினிகாந்த் (Actor Rajinikanth) நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் நேற்று (அக். 10) உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி, வெற்றிகரமாக ஓடி வருகிறது. அந்த வகையில், வேட்டையன் (Vettaiyan Movie) திரைப்படத்திற்கு கோவில்பட்டியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரையரங்கத்தை மக்கள் முற்றுகையிட்டு, படத்தை திரையிடக்கூடாது என முற்றுகையிட்டு வருகின்றனர். இதன் பின்னணி குறித்து இங்கு முழுமையாக காணலாம். 


வேட்டையன் திரைப்படத்தில் கோவில்பட்டி (Kovilpattu) காந்தி நகரில் உள்ள அரசு பள்ளி குறித்து தவறாக சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கோவில்பட்டி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியையும், தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பள்ளியையும் படத்தில் தவறாக சித்தரித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில்பட்டி லட்சுமி திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


காரசாரமான வாக்குவாதம்


வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காட்சியை நீக்கிவிட்டு திரைப்படத்தை திரையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் அந்த திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் அவர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து புகார் அளியுங்கள், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.


மேலும் படிக்க |  Vettaiyan Review: ரசிகர்களை ஏமாற்றியதா வேட்டையன் படம்? விமர்சனம், இதோ!


திரைப்படத்தை நிறுத்த வலியுறுத்தி பெண்கள் திரையரங்கு நிர்வாகிகளிடம் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திரையரங்கு நிர்வாகி ஒருவர், "நீங்க யாருக்கு ஓட்டு போட்டிங்களோ அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார்" என்று கோபமாக சொன்னார். அதற்கு அங்கிருந்த பெண்கள், 'நாங்க யாருக்கு வேணாலும் ஓட்டு போடுவோம், எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்' என்றனர். 


வேட்டையன் திரைப்படம் எப்படி இருக்கு?


லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை 'கூட்டத்தில் ஒருவன்', 'ஜெய்பீம்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய டி.ஜே. ஞானவேல் இயக்கி உள்ளார். இதில் ரஜினி உடன் நீண்ட வருடங்களுக்கு பின் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார். மேலும், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா, ரோகிணி, அபிராமி, கிஷோர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது எனலாம். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.


ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஓராண்டுகளுக்கு பிறகு ரஜினி திரைப்படம் வெளியாகியிருப்பதாலும், ஆயுத பூஜை விடுமுறை தினங்கள் இருப்பதாலும் வேட்டையன் திரைப்படத்தை காண ரசிகர்களும், பொதுமக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 


கல்வி சமத்துவம், அரசு பள்ளிகளின் முக்கியத்துவம், தனியார் கோச்சிங் சென்டர்களில் நடைபெறும் மோசடி என கல்வித்துறை சார்ந்த காத்திரமான கருத்தை வேட்டையன் திரைப்படம் முன்வைத்திருப்பதாக திரைப்பட விமர்சகர்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். ரஜினி போன்ற உச்ச நட்சத்திரங்கள் கதைக்கு முக்கியத்துவம் அளித்து இதுபோன்ற சமரசமற்ற திரைப்படங்களில் நடிப்பது திரைத்துறைக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் எனவும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் கோவில்பட்டி மக்கள் தங்கள் ஊர் பள்ளியை திரைப்படத்தில் தவறாக சித்தரித்துவிட்டதாகவும், உடனே அந்த காட்சிகளை நீக்கக்கோரியும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதற்கு படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா இல்லையா என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க |  ரஜினிகாந்தின் வேட்டையின் திரைப்படம்... மதுரையில் குத்தாட்டம் போட்டு கொண்டாடிய ரசிகர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ