பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு பாகிஸ்தான் கைது செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி  என்றும் பாகிஸ்தான் கூறி குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா,  ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை  ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 


இந்நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. 


முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், குல்பூஷன் யாதவின் ஒப்புதல் வாக்கு மூலம் என்ற பெயரில் பாகிஸ்தான் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் சுமத்தியிருந்தது நினைவிருக்கலாம்.