மிசரோம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து குமனன் ராஜசேகரன் ராஜினாமா செய்வதாக அறிவித்த நிலையில், அவரது ராஜினாமா கடிதத்தினை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் அஸாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்ஹி மிசரோம் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராக கூடுதல் பதிவி வகிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிசரோம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கும் வரையில் ஜெகதீஷ் முக்ஹி-ன் பதவி காலம் நீடிக்கும் எனவும் குடியரசு தலைவர் மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS)-தில் நெடுநாட்களாக இருந்து வரும் குமனன் ராஜசேகரன், கேரள மாநில பாரதீய ஜனதா தலைவராகவும் இருந்தவர் ஆவார். மிசரோம் மாநிலத்தில் நியமன ஆளுநராக இருந்த ஜென்ட்ரல் நிர்பயா ஷர்மா ஓய்விற்கு பின்னர் கடந்த மே 25, 2018 அன்று மிசரோம் மாநிலத்தின் ஆளுநராக குமனன் ராஜசேகரன் பதவியேற்றுக்கொண்டார்.


இந்நிலையில் தற்போது மிசரோம் மாநில ஆளுநர் பதவியில் இருந்து குமனன் ராஜசேகரன் ராஜினாமா செய்துள்ளார். 


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திருவணந்தபுரத்தில் இருந்து போட்டியிட குமனன் ராஜசேகரன் பெயர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இதன் காரணமாகவே குமனன் ராஜசேகரன் பதவி விலகி இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கட்சியின் முழு ஆதரவு குமனன் ராஜசேகரன்-க்கு இருப்பதாக தெரிவித்த கேரள மாநில பாஜக தலைவர் PS ஸ்ரீதரன், எதிர்வரும் தேர்தலில் குமனன் ராஜசேகரன் LDF வேட்பாளர் சி திவாகரன், காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூரை எதிர்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.