சீன எல்லையருகேயுள்ள லடாக் பகுதியில் 100 ராணுவ டாங்குகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய எல்லையில் சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இந்தியா- சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா சீனா இடையே போர் மூண்டது. அப்போது, இங்கு ராணுவ டாங்குகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு பின்னர் டாங்குகள் திரும்ப பெறப்பட்டன.


இந்நிலையில், லடாக் பகுதியில், சீன எல்லைக்கு சற்று தொலைவில் 100 ராணுவ டாங்குகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில ராணுவ டாங்குகள் அங்கு செல்ல உள்ளன. லடாக் போன்ற உயரமான மலைச் சிகரத்தில் டாங்குகளை கொண்டு செல்வது சிரமம். அந்த பகுதியில் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் குளிர் மற்றும் உறைபனி நிலவுகிறது. இதனால் உறைபனியில் டாங்குகளை இயங்க செய்யும் வகையில் எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக பிரத்யோகமாக இன்ஜின்ககள் பயன்படுத்தப்படுவதாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.