சமீபத்தில் ஈரான் சென்று லடாக் திரும்பிய 76 வயது நபர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தற்போது வரையில் இந்தியாவில் 40 பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் ஒரு நபர் லடாக்கில் இறந்திருப்பதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் காவலரான அவர், சனிக்கிழமை இரவு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார். அவரது மரணம் அவரது கிராமத்தை சுற்றி வளைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளை தூண்டியுள்ளது.


லடாக் நிர்வாகத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த நபர் ஒரு COVID-19 நோய்த்தொற்றுடன் தொடர்புடைய நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிற மருத்துவ நிலைமைகளின் வரலாறும் இருப்பதால், அவர் உண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அறிவிக்க இறுதி சோதனை முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.


லேவில் உள்ள சுகாதார அதிகாரி டாக்டர் மோதிப் டோர்ஜய் செய்தி நிறுவனமான ANI-யிடம் இதுகுறித்து தெரிவிக்கையில்., "அவருக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டதால் அவர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். கடந்த சில நாட்களாக அவர் சிறுநீர் பாதை தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். எனினும் கடந்த சில தினங்களாக அவர் நலத்தில் கண்ட மாற்றம் கொரௌனாவிற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. எனவே, அவரது ரத்த மாதிரிகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். டெல்லி அணியுடன் தொடர்பில் உள்ளனர், அறிக்கை இரண்டு நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கிறோம். இந்த முடிவின் பின்னரே அவர் கொரோனாவால் இறந்துள்ளாரா என உறுதிப்படுத்தமுடியும்" என தெரிவித்துள்ளார்.


இந்த நபர் அண்மையில் ஈரானுக்கு ஒரு யாத்திரை பயணம் மேற்கொண்டார், அதே விமானத்தில் COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் இருந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் வடக்கு திசையில் உள்ள யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமையன்று கொரோனா வைரஸின் முதல் வழக்குகள் வெளியான நிலையில் தற்போது கொரோனா தொற்று அறிகுறிகளுடன் ஒரு இறப்பு சம்பவம் தெரியவந்துள்ளது.


இது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து அவரது கிராமத்தை சுற்றி வளைக்க அதிகாரிகளை தூண்டியுள்ளது. அந்த வகையில் லடாக்கில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.


இதேபோன்ற வழக்கு மேற்கு வங்காளத்திலும் பதிவாகியுள்ளது, அங்கு முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளார். சவுதி அரேபியாவிலிருந்து திரும்பியதைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன் அவர் அனுமதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளார்.


நாவல் கொரோனா வைரஸிற்கான அவரது சோதனை முடிவுகள் காத்திருந்த போதிலும், அந்த நபர் நீரிழிவு நோயால் இறந்திருக்கலாம் என்று மருத்து நிர்வாகம் தெரிவிக்கின்றது.