பெங்களூருவின் ஹூமாவு பகுதியில் ஏரி கரையின் ஒரு பகுதி இடிந்ததால், குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த வெள்ளம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவில் சாலைகள் மற்றும் வீடுகள் திடீரென வெள்ளத்தில் மூழ்கி. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பெங்களூரின்  பல பகுதிகளில் இரண்டு முதல் ஐந்து அடி வரை நீர் நிரம்பி வழிந்தது. ஹுலிமாவு ஏரி உடைந்து, நகர எல்லைக்குள் பாய்ந்து, அதன் எல்லையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஏரி உடைந்ததில், நூற்றுக்கணக்கான வீடுகள் பாதித்தனர். 


1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிற்பகலில் தண்ணீர் அருகிலுள்ள பகுதிகளுக்குள் புகுந்தது, அதன் பின்னர் தீயணைப்பு மற்றும் அவசர சேவை, தேசிய பேரிடர் பதில் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் பதிலளிப்பு படை (SDRF) ஆகிய பல்வேறு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் 193 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் மற்றும் தற்காலிக இரவு தங்குமிடம் புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (BBMP) அமைத்துள்ளது.


இச்சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் கூறுகையில், அப்பகுதியில் உள்ள சிலர் போர்வெல் போடுபவர்களின் துணையுடன் ஏரி கரையில் குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏரி கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரி நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்கள் சென்றது. ஏராளமான கார்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் மிதக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி உள்ள 250 குடும்பங்களை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றார். 


250 குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை அவர்களுக்கு தேவையான உணவுகள், அவசர கால அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரி கரையின் உடைப்பை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் ஏரி உடைப்பிற்கு காரணமானவர்கள் குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.