இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் என்.டி.ஆர். பற்றிய படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய, லட்சுமி‘ஸ் என்.டி.ஆர். என்ற தெலுங்கு திரைப்படத்தில், சந்திரபாபு நாயுடுவை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 


எனவே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆந்திராவில் தேர்தல் முடிந்த பிறகு படத்தை திரையிடலாம் என அனுமதி வழங்கியது. அதன்படி, மே 1 ஆம் தேதி படத்தை வெளியிட ராம் கோபால் வர்மா முடிவு செய்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இந்நிலையில், அப்படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி, இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.


தேர்தல் நடத்தை விதிமுறை களை சுட்டிக்காட்டி, இந்தப் படத்தை திரையிட ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபால் கிருஷ்ண திவிவேதி அனுமதி மறுத்துள்ளார்.