புது டெல்லி (Lalu Prasad Yadav) : பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கடந்த சனிக்கிழமை அன்று தனது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் தோள்பட்டை எலும்பு முறிந்ததை அடுத்து, உடனடியாக பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவான ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அவருக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி அழைத்து (புதன்கிழமை இரவு) வரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்த நிலையில், தற்போது தோள்பட்டை எலும்பு முறிந்துள்ளதால், அவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லாலு பிரசாத் யாதவுக்கு என்னானது? மகன் தேஜஸ்வி யாதவ் விளக்கம்


லாலு பிரசாத் யாதவ் உடல்நிலைக் குறித்து பேசிய அவரது மகன் தேஜஸ்வி யாதவ், "அப்பாவுக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவரது உடலில் எந்த அசைவும் இல்லை. இனி அடுத்து வரும் நாட்கள் மிகவும் முக்கியமானது" எனக் கூறிய அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கீழே கிழுந்து தோள்பட்டை எலும்பு முறிந்ததால், சிங்கப்பூர் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு, மருத்துவரிடம் ஆலோசித்து, அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்யப்படும் என்றார். 


மேலும் படிக்க: படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ்


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை


தற்போது லாலு பிரசாத் யாதவ் டெல்லி எய்ம்ஸ் கார்டியோ நியூரோ சயின்ஸ் சென்டரில் (சிஎன்சி) அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தொடர்ந்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. முழு பரிசோதனைக்குப் பிறகு, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


லாலுவின் உடல்நலம் முன்னேற பிராத்தனைகள்


மறுபுறம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உடல் நலம் நலம் பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோயில், மசூதி உட்பட இடங்களில் பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர்.


என்னனென்ன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார் லாலு யாதவ்


லாலு யாதவுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரகம் பாதிப்பு, மன அழுத்தம், யூரிக் அமிலம் அதிகரிப்பு, மூளை தொடர்பான நோய்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தவறி விழுந்ததில் வலது தோள்பட்டை எலும்பு முறிவு மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரின் உடல்நிலை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க: மக்களவை தேர்தலில் மோடி வாக்குறுதியை டப்ஸ்மேஷ் செய்த லாலு!! -வீடியோ


சிறுநீரக செயலிழப்பு:


முக்கியமாக சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலம் மிகவும் மோசடமடைந்துள்ளது. அவரது உடலில் கிரியேட்டினின் அளவில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. அதாவது முன்பு 4 ஆக இருந்த நிலையில், தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக ஒரு நல்ல ஆரோக்கியமான மனிதனுக்கு கிரியேட்டினின் அளவு 0.7 முதல் 1.3 mg/dL வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்க்கரை அளவு அதிகரிப்பு


அவரின் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதால், இது அவருக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு முதல் இன்சுலின் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க: சிவன் வேடத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய லாலு மகன் தேஜ் பிரதாப் -வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR