2014 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியை டப்ஸ்மேஷ் செய்து வெளியிட்ட RJD தலைவர் லாலு பிரசாத் யாதவ்!!
ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் லாலு பிரசாத் பீகார் முதல்வராக இருந்தபோது, அரசு சார்பில் மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவர், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரம், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்து கொண்ட அவர், அங்கு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருகிறார்.
இந்நிலையில், கடந்த 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதி அளிக்கும் குரல் பதிவிற்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், வாயசைத்து டப்ஸ்மேஷ் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலையொட்டி பிரச்சாரங்கள் அனல் பறந்து வரும் நிலையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது அனைத்து இந்தியர்களின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்தப்படும் எனவும், இனி நல்ல காலம் பிறக்கும் எனவும் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் பல வாக்குருதிகளை கொடுத்தார். மோடியின் அந்த வாக்குறுதி குரல் பதிவிற்கு, வாயசைத்து லாலு பிரசாத் டப்ஸ்மேஷ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
मुफ़्त में ले लो 15 लाख, अच्छे दिन और जुमला। pic.twitter.com/2Pfhg2QemK
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) April 13, 2019
அதுமட்டும் இன்றி அவர், முன்னதாக இந்த வாரம் ஒரு ஃபேஸ்புக் இடுகையில் பகிர்ந்து கொள்ளப்பட்ட லாலு, பீகார் மக்களுக்கு "இட ஒதுக்கீட்டு எதிர்ப்பு மற்றும் நரேந்திர மோடிக்கு எதிரான" குற்றச்சாட்டுகளைத் தூண்டிவிடுமாறு வலியுறுத்தினார். "மோடி அரசாங்கம் இடஒதுக்கீட்டை முடிக்க முற்பட்டபோது, தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகள் எப்படி இருந்தன?" RJD தலைவரின் பேஸ்புக் இடுகையில் குறிப்பிட்டுள்ளார்.