பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஷ்டிரீய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2017–ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்தது. லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாகவும், அவரது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில்., ‘71 வயது ஆகும் லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகங்கள் முறையாக செயல்படவில்லை. அவருடைய சுகர் மற்றும் ரத்த அழுத்தத்தின் அளவும் ஏற்றத் தாழ்வுடன் இருந்துவருகிறது. அவரது உடல்நிலை நலமுடன் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.