பெருமளவு பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்ற பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் கூறியுள்ளன.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஊடுருவிய 25-30 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சனிக்கிழமை ஸ்ரீநகருக்கு அருகே உள்ள பிரிஸ்தாபல் என்ற இடத்தில் பஸ்சில் சென்று கொண்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் சுட்டதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்பட 8 வீரர்கள் பலியாகினர். மேலும் 2௦-க்கு மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இது தான் மோசமானது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் விதமாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு 50 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன.ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன்னதாக தாக்குதல்களை முடிக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்று தெரியவந்து உள்ளது. லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கம் சுமார் 


50 பயங்கவாதிகளை காஷ்மீரின் மத்திய மற்றும் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தும் விதமாக உள்ளே அனுப்பிஉள்ளது. ஜூன் முதல் அக்டோபர் வரையில் மிகப்பெரிய அளவில் தாக்குதல்களை அரங்கேற்ற வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டம், ஊடுருவல்களும் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.