லஸ்கர்–இ–தொய்பா தளபதி அபு உகாசா கைது
பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி அபு உகாசா கைது செய்யப்பட்டார். காஷ்மீர் மாநிலம் எல்லைப்புற குப்வாரா மாவட்டம் லோபலில் உள்ள சந்தையில் ரகசிய தகவலின்பேரில் போலீசார் நடத்திய சோதனையின்போது அவர் பிடிபட்டார்.
அவன் பிடிபட்டவுடன் கூட இருந்த 2 கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களிடம் இருந்து ஒரு கை எறிகுண்டும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவனிடம் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.