வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்காண கூடுதல் அவகாசம் இன்று ஆகஸ்ட் 5 முடிவடைகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு ஜூலை 31 கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. மேலும் வரிகணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவித்தது. 


எனினும் வரிதாக்கல் செய்தோர் கடைசி நாளான ஜூலை 31ஆம் தேதி வரி கணக்கு தாக்கல் செய்ய வருமான வரித்துறை சர்வர் முடங்கியது. ஆகையால் வரி தாக்கல் செய்ய காலக்கெடு (ஆகஸ்ட் 5) இன்றுவரை நீட்டிக்க பட்டது. எனவே மக்கள் வரியினை செலுத்த இன்று நள்ளிரவு 12 மணி வரை வருமானவரித்துறை அலுவலகம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.