NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!
![NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று! NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/09/11/118882-net.jpg?itok=mnMVUMYy)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் தேசிய தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். ’NET’ என பிரபலமாக அறியப்படும் இந்த தேர்வானது, இந்தியாவில் ஒருவர் தனது ஆராய்ச்சியாளர்(PhD) படிப்பினை பயில அல்லது பல்கலைக்கழக மட்டத்தில் கற்பிக்கும் நிலைக்கு விண்ணப்பிப்பதற்கான ஒரு வழியாகும்.
இந்த தேர்விற்கு வின்னப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது படிவங்களை www.cbsenet.nic.in -ல் சமர்ப்பிக்களாம்!
’NET நவம்பர் 2017’ சில முக்கிய தேதிகள்;-
ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 11, 2017
ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 12.09.2017
செப்டம்பர் 19, 2017 முதல் செப்டம்பர் 25, 2017 வரை இணையத்தளத்தில் தங்களது விண்ணப்பப்படிவத்தில் உள்ள பிழைகளை திருத்தங்கள் செய்து கொள்ளலாம்.
NET நவம்பர் 2017 தேர்வு தேதி: நவம்பர் 5, 2017