Covid-19 Guidelines: அதிகரிக்கும் கொரோனா...புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
New Covid-19 Guidelines: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைகளை எதிர்கொள்ள, சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் என ஐந்து வகையான உத்தியைப் பின்பற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள என்ன வகையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது
பாக்டீரியா தொற்றுக்கு மருத்துவ ரீதியாக சந்தேகம் இருந்தாலொழிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்தக் கூடாது. பிற உள்ளூர் நோய் தொற்றுகளுடன் கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டும். லேசான நோய் அறிகுறிகள் இருக்கும்போது சிஸ்டமிக் மற்றும் கார்டிகோ ஸ்டீராய்டுகளை பரிந்துரைக்க தேவையில்லை என தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ATM-ல் ₹2000 நோட்டுகள் கிடைக்காதது ஏன்... நிர்மலா சீதாராமன் கூறியது என்ன!
ஹைட்ராக்ஸி குளோரோகுயின், ஐவர்மெக்டின், மோல்னுபிராவிர் மற்றும் ஃபேவிபிராவிர் உட்பட, கோவிட்-19-ல் பயன்படுத்தக்கூடாத சில மருந்துகளை மத்திய சுகாதாரதுறை அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் பட்டியலிடுகின்றன. நோயாளிகள் 5 நாட்கள் வரை ரெம்டெசிவிர் மருந்தை மிதமான அல்லது கடுமையான சந்தர்ப்பங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் குறிபிடப்பட்டுள்ளது.
கடுமையான நோய் அல்லது ICU அனுமதிக்கப்பட்ட 24-48 மணி நேரத்திற்குள் Tocilizumab-ஐப் பரிசீலிக்க வேண்டும். அதாவது, மிதமான அல்லது கடுமையான நோய் வேகமாக முன்னேறி வருபவர்களுக்கு இந்த வழிகாட்டுதல்கள் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. இதுதவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.
உடல் இடைவெளி, மாஸ்க், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், அதிகளவு தண்ணீர் குடித்தல் ஆகியவற்றை சரியாக பின்பற்ற வேண்டும். வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டலைக் கண்காணிக்கவும், சிகிச்சையளிக்கும் மருத்துவருடன் தொடர்பில் இருங்கள் என மக்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் படிக்க | மக்களே உஷார்! 126 நாட்களுக்குப் பிறகு அதிக அளவில் கொரோனா பாதிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ