Karnataka Dysp Ramachandrappa Viral Video : நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளும் துன்புறுத்தல்களும் எத்தனை பேர் போர் கொடி தூக்கினாலும் நிற்பதாக இல்லை. அதுவும், சமீப சில காலங்களாக இந்த அத்துமீறல்கள் அதிகரித்து விட்டது. அப்படி, கர்நாடகாவில் போலீஸ் டிஎஸ்பி ஒருவர் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரலாகும் வீடியோ: 


கர்நாடகாவின் துணை காவல் கண்காணிப்பாளர் செய்துள்ள செயல்தான் தற்போது வைரல் வீடியோவாக சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகிறது. இவர் இருக்கும் காவல் நிலையத்திற்கு, ஒரு பென் புகார் கொடுக்க வந்திருக்கிறார். அப்போது அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கும் வீடியோவை பலர் இணையத்தில் பதிவிட்டிருக்கின்றனர். 


அந்த காவல் அதிகாரியின் பெயர் ராம சந்திரப்பா. இந்த வீடியோ வெளியானவுடன், அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. 


35 விநாடிகள் இருக்கும் அந்த வைரல் வீடியோ, கடந்த வியாழக்கிழமை இரவு முதல் வைரலாகி வருகிறது. இதில், இந்த வீடியோ, ராமச்சந்திரப்பாவின் கண்காணிப்புக்கு கீழ் இருந்த தும்குரு மாவட்டத்திலன் காவல் நிலையத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் அந்த பெண்ணை இவர் ஆசைக்கு அடிபணிய கூறும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் அவர் திரும்பியவாறு இருக்கிறார், இதனால் அவர் முகம் சரியாக தெரியவில்லை.. இவரை, யாரோ ரகசியமாக செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது. 


உடனடி ஆக்‌ஷன்:


இந்த வீடியோவை பார்த்தவுடன் தும்குரு மாவட்டத்தின் தலைமை காவல் கண்காணிப்பாளர் அசோக் இது குறித்து பேசினார். அப்போது, இந்த வீடியோ உண்மை தானா என்று விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அதன் பிறகு வீடியோ முழுமையாக மக்களிடையே வைரலாகி கவனம் பெற்ற நிலையில், அரசாங்கமே நேரடியாக சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை பதவியை விட்டு நீக்கியிருக்கிறது. புகார் கொடுக்க வந்த பெண்ணிற்கு, இப்படி ஒரு அநீதி நிகழ்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க | இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!


மேலும் படிக்க | பெண்ணிடம் பாலியல் சீண்டல்! செருப்படி வாங்கிய ஆட்டோ ஓட்டுநர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ