Kerala College Student Suicide Case News in Tamil : கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர், கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று தான் தங்கியிருக்கும் கல்லூரி விடுதி அறையின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், தற்போது பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்துள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவர்:


கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில், சித்தார்த்தன் என்ற 20 வயது கல்லூரி மாணவர் படித்து வந்தார். இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று, இவர் தனது கல்லூரி விடுதி அறையின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் ஏன் நிகழ்ந்தது என்பது குறித்தும், இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில்தான், வழக்கு சிபிசிஐடி அதிகாரிகளின் கைக்கு மாறியது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. 


29 மணி நேர டார்ச்சர்!


மாணவர் சித்தார்த்தன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு 29 மணி நேரத்திற்கு முன்பு, அவரது வகுப்பு மாணவர்களும், சீனியர்களும் சேர்ந்து கொடுமை செய்ததாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 


பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரையும் மற்றும் பிப்ரவரி 17ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் இவரை உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் சீனியர் மாணவர்கள் சேர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் (Physically and Mentally) கொடுமை செய்துள்ளனர். 


கை மற்றும் பெல்டை உபயோகித்து அந்த மாணவரை ரேக்கிங் செய்திருக்கின்றனர். இது, அவருக்கு மன ரீதியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு இனி கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்ற எண்ணமோ, வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமோ தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. 


தனக்கு தற்கொலை செய்து கொள்வதை விட வேறு வழியில்லை என்று நினைத்த அவர், தான் தங்கியிருக்கும் விடுதி அறையில் பிப்ரவரி 18ஆம் தேதியன்று மதியம் 12:30 மணியில் இருந்து 1:45 மணிக்குள்ளாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | லிவ்-இன் உறவிலும் பெண்களுக்கு பாதுகாப்பு... ஜீவனாம்சம் உண்டு - உயர் நீதிமன்றம் அதிரடி


20 பேர் மீது வழக்குப்பதிவு:


மாணவரின் தற்கொலையில் தொடர்புடைய 20 பேர் மீது வயநாடு போலீஸார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், சிபிஐ அந்த 20 பேர் மீது நேற்று முன்தினம் (ஏப்ரல் 5) தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், கம்யூனிஸ்டு கட்சி, சிபிஐ(எம்),  இந்திய மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த ஆர்வலர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அரசியல் பின்னணியா?


உயிரிழந்த கல்லூரி மாணவர் சித்தார்த்தனின் தந்த்ஐ ஜெயபிரகாஷ், தனது மகன் உயிரிழப்பதற்கு 8 மாதங்களுக்கு முன்பிருந்து இந்த கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும், இந்திய மாணவர் கூட்டமைப்பு பல மாதங்களாக கல்லூரியில் அரசியல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், தனது மகன் ஆடைகள் களையப்பட்டு முட்டி போட்டு உட்கார வைக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். 


இதை அவர்கள் தடுத்து நினைக்க நினைத்திருந்தால், எப்போதோ நிறுத்தியிருக்கலாம் என்றும், இந்திய மாணவர் கூட்டமைப்பு தலைவர்கள் இதைப்பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 


இந்த வழக்கில் அரசியல் கட்சியை சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கேரள மாநிலத்தின் முதலமைச்சர் பிரணாயி விஜயன், மார்ச் 9ஆம் தேதி மாணவரின் வழக்கை சிபிஐ கையில் எடுக்கும் என தெரிவித்திருந்தார். சொன்னபடி, மாணவரின் இறப்பு குறித்த முக்கிய ஆவணங்களை அரசு சிபிஐ அதிகாரிகளிடம் குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்காததால் சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது. இதனால், இறந்து போன மாணவரின் இறப்பிற்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. 


(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)


மேலும் படிக்க | பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் 10 வயது சிறுமி உயிரிழப்பு! அதிர்ச்சி காரணம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ