சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு காரணமான பிரபல அரசியல்வாதி!! திடுக்கிடும் பின்னணி..
Latest News Real Reason Behind Naga Chaitanya Samantha Divorce : தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் மீது அமைச்சர் கொண்டா சுரேகா மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
Latest News Real Reason Behind Naga Chaitanya Samantha Divorce : தென்னிந்திய திரையுலகை உலுக்கிய சமந்தா-நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு பின்னால் ஒரு பிரபல அரசியல்வாதி காரணமாக இருப்பதாக ஒரு அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
திடுக்கிடும் குற்றச்சாட்டுகள்:
தெலங்கானா, ஆளும் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா (Konda Surekha). இவர், முன்னாள் அமைச்சர் கே.டி.ராமா ராவ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதில் ஒன்று, நாக சைதன்யா-சமந்தாவின் விவாகரத்துக்கு அந்த அமைச்சர் காரணம் என்பதுதான்.
இது குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோவில், முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் திருமண விவாகரத்தில் பெரும் பங்காற்றியதாக கூறியிருக்கிறார். மேலும், அவருக்கு போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும், அதற்கு அவர் அடிமையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார். இதை வைத்து சில பார்டிக்களை நடத்தில், இதன் மூலம் தன் வலையில் சிக்கியவர்களை ப்ளாக் மெயில் செய்ததாக கூறியிருக்கிறார்.
சமந்தாவை அழைத்த கே.டி.ஆர்!
கொண்டா சுரேகா கூறியிருக்கும் விஷயங்கள் மேலும் திடுக்கிட வைக்கும் அளவிற்கு இருக்கின்றன. சமந்தாவை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு, நாகார்ஜுனாவிடம் கேடிஆர் கேட்டதாகவும், அதற்கு நாகார்ஜுனா ஒப்புக்கொண்டு சமந்தாவை அவரிடம் செல்லுமாறு கூறியதாகவும் பேசியிருக்கிறார். மேலும், இதற்கு சமந்தா சம்மதிக்காததால், நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ததாக கொண்டா சுரேகா கூறியிருக்கிறார். இவரது இந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளுக்கு நாகார்ஜுனா பதிலளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க } நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?
நாகார்ஜுனா பதிவு:
அமைச்சர் கொண்டா சுரேகா தன் குடும்பத்தினர் பற்றி கூறியிருப்பது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், “சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை வைத்து அரசியல் செய்யாதீர்கள்” என்று கூறியிருக்கும் அவர், “உங்கள் குற்றச்சாட்டுகளையும் கருத்துகளையும் திரும்ப பெற வற்புருத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
திருமணம்-விவாகரத்து-2வது திருமணம்:
நடிகை சமந்தாவிற்கும் நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. சில ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், திருமணமான 3 ஆண்டுகளுக்குள்ளாகவே விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து, தற்போது ஒரு புறம் சமந்தா சிங்கிளாக வாழ்ந்து வர, இன்னொரு புறம் நாக சைதன்யா சோபிதா துலிபலாவை டேட்டிங் செய்து வந்தார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து, சமந்தாவுடன் திருமண உறவில் இருந்த போதே நாக சைதன்யா சோபிதாவுடன் உறவில் இருந்ததாகவும், இதனால்தான் இருவருக்கும் விவாகரத்து ஆனதாகவும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வைத்து பார்க்கும் போது, எதை நம்புவது என்றே தெரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
மேலும் படிக்க | நாக சைதன்யா-சோபிதா திருமண நிச்சயதார்த்தம்! சமந்தா ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ