Kumbh Mela Stampede Latest News: மகா கும்பமேளாவின் 17வது நாளில், அதாவது மௌனி அமாவாசையின் புனிதத் திருநாளில் அமிர்த ஸ்நானம் எடுப்பதற்கு முன் நள்ளிரவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர் மற்றும் ஏராளமான மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் மரணம் தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், சந்தேகம் எழுந்துள்ளது. மௌனி அமாவாசை நீராட்டு விழாவையொட்டி மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மகா கும்பமேளாவில் கூட்டம் அலைமோதியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் உள்ள மூன்று தனித்தனி பகுதிகளில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நதிகளின் கரையில் அமர்ந்திருந்த மக்கள் குழுக்களாக முன்னேறிச் சென்றதாக கூறப்படுகிறது. 


அப்பொழுது அங்கு போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் உடைந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், கூட்ட நெரிசலில் ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் டஜன் கணக்கான ஆம்புலன்ஸ்களில் மகா கும்ப் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


பலத்த காயமடைந்த பக்தர்களும் மேல்நிலை மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவசரத் தேவைக்காக மகா கும்பமேளாவின் மத்திய மருத்துவமனை கன்டோன்மெண்டாக மாற்றப்பட்டு உள்ளது. 


சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், சில பெண்கள் மூச்சுத் திணறி ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இதனால், தடுப்புச்சுவர் உடைந்ததாக கூறியுள்ளனர். 


20 முதல் 25 பேர் காயமடைந்து உள்ளனர். அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குப் பிறகு, மகாகும்பத்தில் கூட்டத்தை திசை திருப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகாகும்பத்தில் பக்தர்களின் நுழைவு நிறுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் கூட்டம் நகருக்கு வெளியே நிறுத்தப்பட்டது. 


10க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த, பிரயாக்ராஜ் எல்லைப் பகுதிகளில் அதிகாரிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர்.


மேலும் படிக்க - மகா கும்பமேளாவின் பேரழகியா இது.. ரசிகர்கள் அதிர்ச்சி! மோனாலிசாவின் Fake வீடியோ வைரல்


மேலும் படிக்க - கும்பமேளாவுக்கும்... மகா கும்பமேளாவுக்கும்... என்ன வித்தியாசம் தெரியுமா?


மேலும் படிக்க - மகா கும்பமேளா நிகழ்ச்சியை 24 மணிநேரமும் நேரடியாக இலவசமாக பார்க்கலாம்! எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ