திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது எனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த பதிவு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள பல்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.