பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் திங்கள்கிழமை மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் திங்கள்கிழமை மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாடகர் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் கூறினார். அவரது நிலைமை ஆபத்தானதாகக் கூறப்படுகிறது.


இனிமையான குரலுக்குச் சொந்தக்காரரான, திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக, மும்பை மருத்துவமனையொன்றின், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு, வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 வயதில் பாடத் தொடங்கி, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில், பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி, இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர், லதா மங்கேஸ்கர்.



கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடிய லதா மங்கேஸ்கர், மும்பையில் உள்ள வீட்டில், தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை லதா மங்கேஸ்கருக்கு, கடுமையான நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மும்பை பிரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் ஃபரோக் இ உத்வாடியா தலைமையிலான மருத்துவர்கள் கண்காணிப்பில், லதா மங்கேஷ்கர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.