உத்தராகண்டில், வேட்டைகாரர்கள் விரித்த வலையில் சிக்கிய சிறுத்தை வனத்துறையினரால் மீட்கப்பட்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தராகண்ட் மாநிலம் உதம் சிங் நகருக்கு உட்பட்ட காதாமாவில் கில்புரா கிராமத்தில், சிறுத்தை புலிகளை பிடிக்க வலை அமைத்துள்ளனர். இந்த வலையில் சிக்கிக்கொண்ட சிறுத்தை ஒன்றினை குறித்த தகவல் அப்பகுதி மக்களால் வனதுறையினருக்கு தெரிவிக்கப்பட்டது.


தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வனத்துறையினர் வலையில் சிக்கிய சிறுத்தையினை பத்திரமாக மீட்டனர். 



மீட்கப்பட்ட சிறுத்தையினை வனவிலங்கு சரனாலயத்திற்கு பத்திரமாக மீட்டு செல்லப்பட்டதாகவும், தற்போது சிறுத்தை பத்திரமாக உள்ளது எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.