கர்நாடகாவில் மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவின் உரையை சேர்ப்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள்ளாகவே சமூக சீர்திருத்தவாதிகளான பெரியார், நாராயணகுரு குறித்த பாடங்கள் 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாநில பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் புதிய சமூக அறிவியல் பாடநூலின் நகல் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில், சமூக மத சீர்த்திருத்த இயக்கங்கள் என்ற பாடத்தில் ராஜாராம் மோகன் ராய், ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த சரஸ்வதி, ஆத்மாராம் பாண்டுரங், ஜோதிபாய் பூலே, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் முந்தைய பதிப்பில் இடம் பெற்றிருந்த பெரியார், நாராயண குரு குறித்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | சிபிஎஸ்இ-யில் நீக்கப்பட்ட பாடங்கள்..ராகுல்காந்தி கண்டனம்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் ஹரீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த சிவகிரி யாத்திரையின் 90-வது ஆண்டு விழாவில் நாராயணகுருவை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியது வெறும் நாடகமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நாராயணகுரு மற்றும் பெரியார் குறித்த பாடங்களை பாஜக அரசு உடனடியாகச் சேர்க்கத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். 


காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.ஆர்.​​லோபோ கூறுகையில், குடியரசு தின அணிவகுப்பிலிருந்து கேரளாவின் நாராயண குரு குறித்த ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கான நோக்கம் தற்போது தெளிவாகிவிட்டதாகவும், வேண்டுமென்றே ஊர்தி நிராகரிக்கப் பட்டிருப்பதாகவும் கூறினார்.


மேலும் படிக்க | ‘சாவர்க்கர் தேவையில்லை, பெரியாரை கொண்டாடுங்கள்’ - ஜிக்னேஷ் மேவானி பேச்சு


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR