ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் ஜனவரி-26ம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் இந்தியாவின் பெருமைகளான கலை, பண்பாடு, நாகரீகம் போன்ற பலவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் அலங்காரம் செய்யப்பட்ட ஊர்திகள் பங்கேற்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் அணிவகுப்பில் பங்கேற்ப பல மாநிலங்களும் அதன் அலங்கார ஊர்திகளை தயார் செய்தது.
ALSO READ | சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இடமாற்றம்! புதிய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன்
இந்நிலையில் தமிழக சார்பில் அணிவகுப்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து இருப்பதும், நிராகரித்ததற்கான விளக்கமும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது தமிழகத்தின் சார்பில் இடம்பெற்ற அந்த அலங்கார ஊர்தியில் தேசிய அளவில் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெறாத காரணத்தால் தமிழகத்தின் ஊர்தியை நிராகரித்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசு வாகனத்தில் வ.உசி, வேலுநாச்சியார் ஆகியோரின் படங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த அலங்கார ஊர்தி முதல் மூன்று சுற்றுகளை கடந்து 4வது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டது மக்களிடத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக குடியரசு தின அணிவகுப்பில் தென்மாநிலத்தை பொறுத்தவரை கர்நாடகாவின் ஊர்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் 2020ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலத்தின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது தமிழகத்தின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்து இருக்கிறது. இதுகுறித்து கோவை செல்வபுரம் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "குடியரசு தின விழா அணிவகுப்பு வாகனத்தில் தமிழக வாகனம் புறக்கணிக்கப்பட்டதாக கூறப்படும் முழு தகவலை கேட்டு விளக்கம் அளிக்கிறேன். சர்வதேச அளவில் தெரியாத தலைவர்கள் என்ற வாதம் ஏற்புடையதல்ல. வீரமங்கை வேலு நாச்சியார், வேண்டுமென்றே புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை, மத்திய அரசிடம் பேசிவிட்டு தகவல் சொல்கிறேன்" என்று கூறினார்.
ALSO READ | உடல் கட்டழகு போட்டியில் தங்கம் வென்ற சங்கீதா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR