ஜம்மு-காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதிகளிடம் பெரிய தாக்குதல் திட்டம் இருந்ததாக அதிர்ச்சிகரமான தகவலை  காவல் துறை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாப்போரில் எண்கவுண்டரில் கொல்லப்பட்ட லஷ்கர்-ஈ-தொய்பா பயங்கரவாதிகளிடமிருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன என்று பாரமுல்லா டிஐஜி எம் சுலேமான் தெரிவித்தார். இவர்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி வந்ததாக அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.


ஜூலை 11-12  இரவு அன்று நடந்த சாப்போர் என்கவுண்டரில் 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து அதிகளவில் வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று DIG சுலைமான் பத்திரிகையாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.


ALSO READ | CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகள் வெளிவந்தன: எங்கு எப்படிப் பார்ப்பது?


சாபோர் என்கவுன்ட்டர் குறித்து விரிவாக பேசிய அவர் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.


சாப்போர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த உளவுத் தகவலை அடுத்து போலீசாரும் CRPF, அதாவது மத்திய ரிசர்வ் காவல் படையும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும்  டிஐஜி கூறினார்


பயங்கரவாதிகள் அங்கு பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போது அவர்களுக்கு சரணடைய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியது கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த அபு ரஃபியா என்ற உஸ்மான் மற்றும் சைஃபுல்லா ஆகியோர் அடங்குவர் என்றும் காவல் துறை கூறியது.


கொல்லப்பட்ட அபு ரஃபியா என்ற உஸ்மான் காஷ்மீரில் 2016ஆம் ஆண்டு முதல் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தான்  என்றும் சமீபத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர் ஒருவரும் மற்றும் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்ட பயங்கரவாத சம்பவத்திற்கும், சாபோரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததாக காவல்துறை தெரிவித்தது கொல்லப்பட்ட மூன்றாவது பயங்கரவாதி இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று காவல்துறை மேலும் தெரிவித்தது.


ALSO READ| கொரோனா, தரவு பாதுகாப்பு, cyber safety பற்றி பிரதமரும், சுந்தர் பிச்சையும் ஆலோசனை


கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் வெடிமருந்துகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது


அப்பகுதியில் உள்ள அனைத்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை அகற்றவும்,  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மக்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது