ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்- தேஜஸ்வி யாதவ்!!
லாலுவுக்கு எதிரான சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
லாலுவுக்கு எதிரான சி.பி.ஐ. கோர்ட்டு அளித்த தீர்ப்பினை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
3_வது மாட்டு தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முன்னால் பீகார் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவுக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி நீதிமன்றம்.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று லாலு மகன் தேஜஸ்வி யாதவ் இன்று கூறியுள்ளார்.நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருப்பினும் நாங்கள் ஏற்று கொள்கிறோம். ஆனால் சி.பி.ஐ. கோர்ட்டின் தீர்ப்பு இறுதியாகாது. உயர் நீதிமன்றத்தில், தேவைப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டிலும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம் என கூறியுள்ளார்.