இனி சந்தையில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்காது; காரணம் என்ன தெரியுமா?
LG மொபைல் போன் மலிவாக கிடைக்கும் மொபைல் போன்களின் ஒன்று. இது வட அமெரிக்காவில் மூன்றாவது மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ளது. தென் கொரிய சந்தையில் அதிகம் வாங்கப்படும் மொபைல் போனாக உள்ளது.
உலகின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான எல்.ஜி எலக்ட்ரானிகஸ் (LG Electronics) தென் கொரியாவின் சியோலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
LG Electronics நிறுவனம் வீட்டு உபயோகத்திற்கான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் மிகவும் பிரபலமான நிறுவனம், இந்த நிறுவனம், டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, மொபைல்கள் என பல எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது.
LG மொபைல் போன் மலிவாக கிடைக்கும் மொபைல் போன்களின் ஒன்று. இது வட அமெரிக்காவில் மூன்றாவது மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ளது. தென் கொரிய சந்தையில் அதிகம் வாங்கப்படும் மொபைல் போனாக உள்ளது. இருப்பினும் உலகின் மற்ற இடங்களில் இதன் சந்தை பெருமளவில் சரிந்துள்ளது.
மொபைல் போன் விற்பனை பெருமளவில் சரிந்து, தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் உற்பத்தியை நிறுத்துவதாக LG எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மொபைல் போன் உற்பத்தியில் கடந்த 6 ஆண்டுகளில் $4.5 பில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 33,000 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக LG எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது.
2013ம் ஆண்டில் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு அடுத்ததாக, மொபைல் போன் சந்தையில் உலகின் 3வது பெரிய மொபைல் போன் நிறுவனமாக இருந்த LG நிறுவனம், மாறி வரும் தொழில் நுட்ப தேவைகளை கருத்தில் கொண்டு, தயாரிப்பில் மேம்பாடு எதையும் மேற்கொள்ளாத காரணத்தினால் சரிவை சந்தித்தது.
தற்போதைய அளவில் எல்.ஜி நிறுவனத்திற்கு வட அமெரிக்காவில் 3வது பெரிய மொபைல் நிறுவனமாக உள்ள LG, லத்தீன் அமெரிக்காவிலும் 5வது பெரிய மொபைல் நிறுவனமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு 2 கோடியே 20 லட்சம் மொபைல் சாதனங்களை எல்.ஜி நிறுவனம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் சாம்சங் சுமார் 26 கோடி மொபைல் போன்களை விற்பனை செய்துள்ளது.
உலக அளவில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தும் முதல் பெரிய நிறுவனமாக LG எலட்ரானிக்ஸ் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Shocking News! சுமார் 50 கோடி Facebook பயனர் விபரங்கள் ஆன்லைனில் வெளியீடு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR