டெல்லியில் யாருக்கு அதிகாரம்? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!
டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் இன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு சட்டப்பேரவை விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் என டெல்லி ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பளித்துள்ளது. இதில், அரசியல் சாசனத்தை மதிக்கும் படியே நிர்வாகங்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும், அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் நல திட்டங்கள் துணைநிலை ஆளுநரால் தாமதமானாலும், அரசால் தாமதமானாலும் இருவருமே பொறுப்பு. மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்படுவதே சிறந்தது. மேலும் அனைத்து விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை
என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவிக்கப்பட்டுள்ளது.