விமானப்படை தளம் அருகே ராக்கெட் வெடிகுண்டு கண்டெடுப்பு

இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் விமானப்படை மையத்துக்கு அருகே ராக்கெட் குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் விமானப்படை மையத்துக்கு அருகே ராக்கெட் குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம், நல் -பிகானீர் பகுதியில் விமானப் படை மையம் அமைந்துள்ளது. இந்த மையத்துக்கு அருகே இன்று காலை ராக்கெட் வெடிகுண்டு கிடந்ததுள்ளது. தகவலறிந்து அங்கு விரைந்த விமானப் படை அதிகாரிகள் அந்த வெடிகுண்டை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் முயற்சி நடப்பதாக தெரிகிறது. நிகழ்விடத்திற்கு விமானப்படை அதிகாரிகள் வருகை வந்துள்ளனர்.