Budget 2023 Highlights: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Wed, 01 Feb 2023-3:01 pm,

Budget 2023 Income Tax Changes, Sitharaman Speech Highlights: 2023-2024 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை நிறைவு பெற்ற நிலையில், அதன் முக்கிய விவரங்கள், அறிவிப்புகளை இங்கு அறியலாம்.

Budget 2023 Income Tax Changes, Sitharaman Speech Highlights அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு பாஜக ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.. அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயம் தொடங்கி தொழில்துறையில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள் இன்றைய மத்திய பட்ஜெட்டின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதில், ரயில்வே துறை பட்ஜெட்டும் அடக்கம். பல ஆண்டுகளாக ரூ. 2.5 லட்சமாக உள்ள வருமான வரி விலக்காக வரம்பு, இந்தாண்டு அதிகரிப்படுமா என மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. வரி சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 


2023-2024 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. இக்கூட்டத்தொடர் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்றைய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, அதன் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறும். 


பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை, அதானி - ஹிண்டன்பர்க் சர்ச்சை உள்ளிட்ட காரணங்கள் இன்றைய பட்ஜெட்டிலும், நடப்பு கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட்டையொட்டிய இந்த காலகட்டத்தில், அரசியல் ரீதியாக எழுந்துள்ள இதுபோன்ற பிரச்னைகளை காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப காத்திருக்கின்றனர். அந்த வகையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை உடனடியாக இங்கு காணலாம். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


Latest Updates

  • உங்கள் வரியை கணக்கிடுவது எப்படி?

    வரி வரம்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? புதிய மற்றும் பழைய வரி முறைகளில் உள்ள வித்தியாசம் என்ன? இதை முழுவதுமாக இங்கு புரிந்துகொள்ளலாம்.

  • PM Modi On Union Budget 2023: பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி

    அமரித் காலின் முதல் பட்ஜெட், வளரும் இந்தியாவைக் கட்டியெழுப்ப வலுவான அடித்தளத்தை உருவாக்கும். ஏழை மக்கள், நடுத்தர மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட லட்சிய சமுதாயத்தின் கனவுகளை இந்த பட்ஜெட் நிறைவேற்றும். அம்ரித் கால் என்றால், சுதந்திர இந்தியாவின் 75ஆவது ஆண்டில் இருந்து 100ஆவது ஆண்டு வரையிலான காலகட்டம் என கூறப்படுகிறது. 

  • Union Budget 2023 Highlights: அரசின் வரவு - செலவு விவரங்கள் ஒரு ரூபாயில்...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கடன் சார்ந்த வரவுகள் - 34 காசுகள்

    ஜிஎஸ்டி & இதர வரிகளான வரவுகள் - 17

    வருமான வரி - 15 காசுகள்

    பெருநிறுவனங்களுக்கான வரி - 15 காசுகள் 

    வரி அல்லதா வருவாய் - 6 காசுகள்

    சுங்க வரி - 4 காசுகள்

    கடன் அல்லாத மூலதனம் - 2 காசுகள் 

  • மத்திய பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இங்கே காணலாம்.

  • Budget 2023-24 Live Updates: மூத்த குடிமக்கள் சேமிப்பு வரம்பு உயர்வு!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தேக்னா அப்னா தேஸ் (உங்கள் நாட்டை பாருங்கள்) என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டு வரப்படுகிறது.

    நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும்.

    'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' (One District One Product) என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.

    உள்நாட்டில் செல்போன் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு; 23 சதவீதத்திலிருந்து 13% வரை வரி குறைப்பு செய்யப்படுகிறது.

    ரோபோடிக் ட்ரோன் கேமிராக்கள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு வழங்கப்படும். தற்போது உள்ள திறன் மேம்பாடு பயிற்சியில் இந்த புதிய அமைப்புகளும் சேர்க்கப்படும்

    சுற்றுலாத்துறைக்கு தனி செயலி

    சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து மாநிலங்களிலும் சுற்றுலாவை ஊக்குவிக்க சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும்.

    அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான உச்சபட்ச வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு

  • சுற்றுலா துறையை மேம்படுத்த புதிய திட்டம் அறிமுகம்
    தேக்னா அப்னா தேஷ் என்ற புதிய திட்டம் சுற்றுலாத்துறைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் 50 முக்கிய இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சுற்றுலாத்துறை என்பது மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Union Budget 2023 LIVE Updates: பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் - அயன் மூலப் பொருட்களுக்கு வரி கிடையாது.

    சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி குறைக்கப்படும்.

    டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5%ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவி, செல்போன், சைக்கிள் விலை குறையும்.

  • Union Budget 2023 LIVE Updates: பட்ஜெட் உரை நிறைவு
     
    சுமார் 1.30 மணிநேரம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். இதில், வருமான வரி உச்ச வரம்பு உயர்வு, வருமான வரி விதிப்பு விகிதங்களில் மாற்றம் என பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 
     
  • Union Budget 2023 LIVE Updates: வரி விதிப்புகள் விகிதங்கள்...!

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆண்டுக்கு ரூ. 3-6 லட்சம் 5 சதவீதம் வரி

    ஆண்டுக்கு ரூ. 9-12 லட்சம் வரை வருமானமும் இருப்பவர்களுக்கு 15 சதவீதம் வரி

    ஆண்டுக்கு ரூ. 6-9 லட்சம் வரை இருப்பவர்களுக்கு 10 சதவீதம் வரி

    ஆண்டுக்கு ரூ. 12-15 20 சதவீதம் லட்சம் 

    ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் 30% வரி

  • Education Budget 2023: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்..
    நாடு முழுவதும் மருந்து துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து, இந்தியாவில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். 

     

  • Union Budget 2023 LIVE Updates: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படுகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    மேலும், புதிய வரி நடைமுறையில் 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டுக்கு வருமான ஈட்டுபவர்கள் எந்த வருமான வரியும் செலுத்த தேவையில்லை 

  • Union Budget 2023 LIVE Updates: சிகரெட் மீதான வரி உயர்வு

    மூன்றாண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சிகரெட் மீதான சுங்க வரி இந்தாண்டு 16 சதவீதம் உயர்த்தப்படுகிறது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: நிதி ஒதுக்கீடு விவரங்கள்

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      மீன்வளத் துறைக்கு ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    • போக்குவரத்து துறைக்கு ரூ. 78 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    • கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி ரூ. 5 ஆயிரம் 300 கோடி.

    • பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    • பழங்குடியின மேம்பாட்டுக்கு ரூ. 15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

    • மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ. 1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

    • இ-நீதிமன்றம் திட்டத்தின் 3ஆவது கட்டத்திற்கு ரூ. 7000 கோடி ஒதுக்கீடு

    • கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

  • தினை உணவுகளுக்கான உலகளாவிய மையம் அமைக்கப்படும்
    தினை பொருட்கள் ஏற்றுமதியில் உலகத்தின் மையமாக இந்தியாவை உயர்த்துவதே குறிக்கோள்.

  • பட்ஜெட் 2023: நிதி அமைச்சரின் 7 முன்னுரிமைகள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தனது பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கியபோது, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் ஏழு முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டி, அவற்றை 'சப்த்ரிஷி' என்று அழைத்தார். 

    பட்ஜெட் 2023: நிதி அமைச்சரின் 7 முன்னுரிமைகள்

    1. உள்ளடக்கிய வளர்ச்சி

    2. கடைசி கட்டத்தை அடையும் வரை முயற்சி

    3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு

    4. திறனை கட்டவிழ்த்து விடுதல்

    5. பசுமை வளர்ச்சி

    6. இளைஞர் சக்தி

    7. நிதித்துறை

    மேலும் விவரங்களுக்கு

  • Union Budget 2023 LIVE Updates: இனி பான் கார்டு?

    பான் கார்டு (PAN CARD) டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஒரு பொதுவான அட்டையாக மாற்றம் - நிர்மலா சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: முக்கிய அறிவிப்புகள்

    • COMMERCIAL BREAK
      SCROLL TO CONTINUE READING

      குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்.

    • பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.

    • 6000 கோடி கூடுதல் முதலீட்டில் மீன்வளத் துறைக்கான கூடுதல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்.

    • பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு 70,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • Union Budget 2023 LIVE Updates: அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

    அரசு ஊழியர்கள் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள கர்மயோகி திட்டம் கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன்

  • மத்திய பட்ஜெட்டில் தினைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தினை நிறுவனத்தை சிறந்த மையமாக அரசாங்கம் ஆதரிக்கும் என்று அறிவித்தார்.

    "தினையின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, இந்தியாவை தினையின் உலகளாவிய மையமாக மாற்ற, இந்திய தினை ஆராய்ச்சி ஹைதராபாத் சர்வதேச அளவில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த மையமாக ஆதரிக்கப்படும்" என்று சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார். 

  • Union Budget 2023 LIVE Updates: புதிய நர்சிங் கல்லூரிகள்

    2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தொடங்கப்ட்ட 157 மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்து 157 புதிய நர்சிங் கல்லூரிகள் நிறுவப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  •  உள்கட்டமைப்பு துறைக்கு பெரிய ஊக்கம்

    பட்ஜெட் 2023 நேரலை: உள்கட்டமைப்பு துறைக்கு பெரிய ஊக்கம். கேபெக்ஸ் செலவுக்கான அளவு 33% உயர்த்தப்பட்டுள்ளது

  • நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி

    நகரங்களை மேம்படுத்த நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிக்கான அறிவிப்பை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டலின் தாக்கம்

    டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தால் இந்தியப் பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டுள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: விவசாய கடன் இலக்கு உயர்வு

    கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளத்தை மையமாக கொண்டு விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் - நிதியமைச்சர் சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: இந்த பட்ஜெட்டின் 7 முன்னுரிமைகள்

    "2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் ஏழு முன்னுரிமைகள் - அனைவரையும் உள்ளடக்கிய மேம்பாடு (Inclusive Growth), நாட்டின் கடைக்கோடி வரை செல்வது, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, திறனை முடுக்கிவிடுதல், பசுமை வளர்ச்சி, இளைஞர்கள் மற்றும் நிதித் துறையை முடுக்கி விடுதல்" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • Union Budget 2023 LIVE Updates: பொருளாதாரத்தில் 5ஆவது இடத்திற்கு முன்னேற்றம்

    "2014ஆம் ஆண்டு முதல் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அரசின் அனைத்து முயற்சிகளும் உறுதி செய்துள்ளது. தனிநபர் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில், இந்தியப் பொருளாதாரம் உலகில் 10-வது இடத்தில் இருந்து 5ஆவது பெரிய அளவில் வளர்ந்துள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

  • Union Budget 2023 LIVE Updates: தொடங்கியது பட்ஜெட் உரை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நடப்பாண்டு இந்திய பொருளாதாரம் 7 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மற்ற வளரும் நாடுகளை விட அதிகம். 

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

    இந்தியப் பொருளாதாரம் சரியான பாதையில் சென்று ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது.

  • வரி சலுகைகளில் அதிகரிடி காட்டுமா அரசு? 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வரி வகைகளில் பல வித சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. அதிகபட்ச வருமான வரி சம்பளம் பெறும் வகுப்பினரிடமிருந்தே வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வரி வரம்பை உயர்த்தி நிதி அமைச்சர் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது தவிர, நிலையான விலக்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    சில முக்கிய எதிர்பார்ப்புகள் இதோ

  • Union Budget 2023-24 Live Updates: இன்னும் சில நிமிடங்கள் மத்திய பட்ஜெட்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மத்திய பட்ஜெட் காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதை முன்னிட்டு, பட்ஜெட் ஆவணங்கள் மிகுந்த பாதுகாப்புடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு எடுத்துவரப்பட்டது. 

     

  • Union Budget 2023 LIVE Updates: நாடாளுமன்றம் வந்தார் பிரதமர் மோடி

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பிரதமர் மோடி நாடாளுமன்றம் வந்தடைந்தார். 

  • Nirmala Sitharaman Live Updates: நாடாளுமன்றம் வந்தார் நிதியமைச்சர்

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வந்தடைந்தார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வார்.

  • Nirmala Sitharaman LIVE Updates: புறப்பட்டார் நிர்மலா சீதாராமன்

    குடியரசு தலைவர் முர்முவை சந்திக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனுக்கு வந்தார். பின்னர், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் நிர்மலா சீதாராமன், பின்னர் 2023-24 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பகல் 11 மணியளவில் தாக்கல் செய்வார்.

  • Railway Budget Live Updates 2023: நிதி ஒதுக்கீடு அதிகரிக்குமா?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ரயில்வே துறைக்கு கடந்தாண்டு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, 2023-24 நிதியாண்டில் சுமார் ரூ.1.8 லட்சம் கோடி அத்துறைக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     

  • Railway Budget Live Updates 2023: ரயில்வே பட்ஜெட் எதிர்பார்ப்புகள்

    ரயில் டிக்கெட் கட்டணத்தை கட்டுப்படுத்துதல், ரயில்களில் தூய்மைக்கு கவனம் செலுத்துதல், ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை பொதுமக்களின் எதிர்பார்ப்புகளாகும். மற்ற நகரங்களில் தேர்வெழுத ரயில்வே தனி ரயில்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒதுக்கப்பட்ட நிதி, புதிய தடங்கள் அமைப்பதற்கும், அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கும், அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கும் உதவும்.

  • Union Budget 2023 LIVE Updates: பட்ஜெட் விவரங்களை எப்படி டவுன்லோட் செய்வது?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நிர்மலா சீதாராமனின் உரைக்குப் பிறகு, முழு பட்ஜெட்டின் ஆவணமும் பொதுமக்களுக்காக 'Union Budget Mobile App' என்ற மொபைல் செயலியில் வெளியிடப்படும். இந்த செயலி மூலம், பட்ஜெட் ஆவணங்களின் முழுமையான தொகுப்பினை நீங்கள் பெறலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட கட்டுரையை அணுகவும்.

    Budget 2023: பட்ஜெட் விவரங்களை உடனடியாக பெற இதை செய்யுங்கள்

  • Budget 2023 Live: பட்ஜெட்டின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நிர்மலா சீதாராமன் இன்று அறிவிக்க உள்ள பட்ஜெட்டின் எதிர்பார்ப்புகள் குறித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். 

    Budget 2023: சம்பள வர்க்கத்தினருக்கு ஜாக்பாட், பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்

    Budget 2023: பருப்பு - சோப்பு விலையெல்லாம் குறையுமா? எதிர்பார்ப்பில் சாமானியர்கள்

    Budget 2023: பட்ஜெட்டில் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இவ்வளவு நன்மைகளா?

    Budget 2023: வரி குறைப்பு முதல் நிதிச் சலுகை வரை: சிறு-குறு தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன?

    பட்ஜெட்டுக்கு பிறகு, இந்த 35 பொருட்களின் விலை அதிகரிக்கலாம்! தயாராகும் மோடி அரசு

     

     

  • Parliament Budget session live: நேரலை எங்கு, எப்படி பார்ப்பது

    நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களில் பார்க்கலாம். யூடியூப்களில் நேரலையில் ஒளிபரப்பப்படும். இதுதவிர ஜீ குழும செய்தி தொலைக்காட்சிகளிலும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் உரை நேரலையாக ஒளிபரப்பாகும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link