Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

Budget 2023 Highlights: சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2023, 01:16 PM IST
  • விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.
  • வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு.
  • பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை.
Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!

மத்திய பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சாமானியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பல அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டன. நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பட்ஜெட் 2023: நிதி அமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்:

- இந்திய பொருளாதாரம் சரியான பாதையில் செல்கிறது. ஒளிமையமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறது.

- கோவிட் பெருந்தொற்றின் போது, ஒருவரும் பட்டினியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதற்காக, 28 மாதங்கள் சுமார் 80 கோடி பேருக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

- உணவு, தானியங்கள் வழங்கல் திட்டத்திற்கு ₹2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

- நாட்டின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இந்த பட்ஜெட் இருக்கும்.

- 9 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதாரம் உலக அளவில் 10ம் இடத்தில் இருந்து 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாட்டின் வளர்ச்சி 7%-ஆக உள்ளது.

- உலகளாவிய சவால்கள் இருக்கும் இந்நேரத்தில், G20 தலைமையை இந்தியா ஏற்றது. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

- 2014 முதல் அரசின் முயற்சிகள் அனைத்து குடிமக்களுக்கும், சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்துள்ளது.

- தனிநபர் வருமானம் 2 மடங்காக அதிகரித்து ₹1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.

- 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம்.

- 9 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் 5-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

- நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7% ஆக இருக்கும் என கணிப்பு உள்ளது.

- 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. 

- 2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும்.

- சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது.

மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

- 9.6 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

- ஜம்மு & காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம்.

- 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

- பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

- கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு.

- மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ6,000 கோடி.

- உஜ்வாலா திட்டத்தின்கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

- கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு.

- தோட்டக்கலை துறைக்கு ₹2,200 கோடி நிதி ஒதுக்கீடு.

- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 1 லட்சம் சுய உதவிக்குழுக்களில் பெண்களை இணைத்து பெரும் வெற்றி கண்டுள்ளோம்

- விவசாயத்துறையில் புதிய ஸ்டார்ட் அப்கள் உருவாக்க ஊக்குவிக்கப்படும்.

- வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடன் வழங்க இலக்கு.

- குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும்.

- 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

- பசுமை எரிசக்தி உற்பத்திக்கு தொடர்ந்து முன்னுரிமை.

- ஐசிஎம்ஆர் நிலையங்களை தனியாரும் பயன்படுத்தலாம்.

- 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம்

- பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு.

மேலும் படிக்க | Budget 2023: டிவி, ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

More Stories

Trending News