LIVE: Uttarakhand Election Results 2022: உத்திராகண்ட் தேர்தல் முடிவுகள்

Thu, 10 Mar 2022-9:04 am,

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன.

Latest Updates

  • உத்திராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி 5,180 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னிலையில் உள்ளார்.

    மங்களூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் சர்வத் கரீம் அன்சாரியை விட காங்கிரஸின் காஜி முகமது நிஜாமுதீன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

  • காங்கிரஸ் தலைவரும் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் லால்குவா தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

  • உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தற்போது 16 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பீம்டால் தொகுதியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜகவின் ராம் சிங் கைடா 2,192 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் நிலையில் வெற்றி ஊர்வலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நீக்கியது.

  • பிரதமர் மோடி உத்தரகாண்ட் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதால் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம், மேலும் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் கடந்த 6 மாதங்களில் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவிட்டார் என்று பாஜக தலைவர் கைலாஷ் விஜவர்கியா டேராடூனில் கூறினார்.

  • தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 42 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 24 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

  • லால்குவான் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் 5,219 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார், பாஜக வேட்பாளர் மோகன் பிஷ்ட் முன்னிலையில் உள்ளார்.

    ஹரித்வார் ஊரகப் பகுதியில் யதீஸ்வரானந்த் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  • தற்போதைய முதல்வரும் பாஜக தலைவருமான புஷ்கர் சிங் தாமி காதிமா சட்டமன்றத் தொகுதியில் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார்.

    நைனிடாலில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளர் சரிதா ஆர்யா 6,020 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

  • ஹல்த்வானி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஜோகேந்திர பால் சிங் ரவுடேலா 4,142 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராய்ப்பூர் தொகுதியில் பாஜகவின் உமேஷ் சர்மா காவ் காங்கிரஸ் ஹிரா சிங் பிஷ்ட்டை விட கிட்டத்தட்ட 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்  முன்னிலையில் உள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் 2,713 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். லால்குவா தொகுதியில் பாஜகவின் மோகன் சிங் பிஷ்த் முன்னிலை வகிக்கிறார்.

  • காதிமா மற்றும் லால்குவா தொகுதியில் பாஜகவின் புஷ்கர் சிங் தாமி மற்றும் காங்கிரஸின் ஹரிஷ் ராவத் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

  • பெரும்பாலான இடங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம், நாங்கள் பின்தங்கியுள்ள தொகுதிகளில் கடும் போட்டி நிலவுகிறது. அதனால், முன்னணி நிலவரம் மாறலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் உத்தரகாண்டில் காங்கிரஸ் பெரும்பான்மை வலுப்பெற்ற கட்சியாக நிச்சயம் இருக்கும். பஞ்சாபிலும் பெரும்பான்மை பெறும் என்று காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத் டேராடூனில் தெரிவித்தார்.

  • தற்போதைய நிலவரப்படி, பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சௌபட்டக்கல் தொகுதியில் சத்பால் மகராஜ் முன்னணியில் உள்ளார்.

  • தற்போதைய முதல்வரும் பாஜக வேட்பாளருமான புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

  • காலை 8:30 மணி நேர நிலவரம்: பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link