Independence Day 2024 Live : பிரதமர் மோடியின் சுதந்திர தின விழா உரையின் முக்கிய அம்சங்கள்..!

Thu, 15 Aug 2024-9:30 am,

Independence Day 2024 Live, Prime Minister Speech Latest Update : நாட்டின் 78வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்

Independence Day 2024 Live, Prime Minister Speech Latest Update : இந்தியா விடுதலை பெற்ற 78வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாறினார். அப்போது, நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கமும், மரியாதையும் செலுத்தப்பட்டது.

Latest Updates

  • Independence Day 2024 Live : தகைசால் தமிழர் விருது

    78வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது முனைவர் குமரி ஆனந்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அவருக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் கொடுத்தார்.

  • Independence Day 2024 Live : பிரதமர் மோடியின் உரை நிறைவு

    78வது சுதந்திர தின விழா உரையில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை நிறைவு பெற்றது. 

  • Independence Day 2024 Live :75,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    ஜனவரி 2026 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  • Independence Day 2024 Live : தமிழ்நாட்டு மக்களுக்கு தலை வணங்குகிறேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு" என கூறினார்

  • Independence Day 2024 Live : ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் - பிரதமர் மோடி

    78வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி "ஊழல் பல ஆண்டுகளாக இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. ஊழலுக்கு எதிராக நாங்கள் போர் தொடுத்துள்ளோம், அதற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்." என தெரிவித்தார்.

  • Independence Day 2024 Live : வீரர்களுக்கு மத்தியில் அமர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி

    ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு மத்தியில் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின விழா உரையை கேட்டார்.

  • Independence Day 2024 Live : தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்.

  • Independence Day 2024 Live : அணிவகுப்பு மரியாதையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்ற வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். 

  • தமிழ்நாடு : தேசியக்கொடி ஏற்றும் முதலமைச்சர்

    78வது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை 

  • Independence Day 2024 Live : பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு கடும் தண்டனை - பிரதமர் மோடி

    டெல்லி சுதந்திர தின விழா உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த விரும்புகிறேன். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து சமூகமாக நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும் - இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு, சமூகம், மாநில அரசுகள் இதைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இந்த கொடூரமான செயல்களைச் செய்பவர்களுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். பெண்கள் மீதான கற்பழிப்புகள் மற்றும் வன்கொடுமைகள் நடப்பது ஒரு கொடூரமான போக்கு. இந்த பாவத்தை செய்பவர்கள் தூக்கு தண்டனைக்கு இட்டுச் செல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என்று பேசினார்.

  • Independence Day 2024 Live : பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு - பிரதமர் நரேந்திர மோடி

    டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் மோடி, "பாதுகாப்பு துறையில் நாம் தன்னிறைவு பெற்றுள்ளோம். இன்று, பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பில் நமக்கென தனி அடையாளம் உள்ளது. பாதுகாப்பு உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது" என்றார்.

  • Independence Day 2024 Live : இந்தியாவுக்கு இது பொற்காலம் - பிரதமர் நரேந்திர மோடி

    டெல்லி செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி "அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளில் 75,000 புதிய இடங்கள் உருவாக்கப்படும். விக்சித் பாரத் 2047 'ஸ்வஸ்த் பாரத்' ஆகவும் இருக்க வேண்டும், இதற்காக நாங்கள் ராஷ்ட்ரிய போஷன் மிஷனைத் தொடங்கியுள்ளோம்." என கூறினார்.

  • Independence Day 2024 Live : இந்தியாவுக்கு இது பொற்காலம் - பிரதமர் நரேந்திர மோடி

    நாட்டின் இளைஞர்கள் மெதுவாக நடக்க விரும்பவில்லை. புதிய உயரங்களை வேகமாக அடைய விரும்புகின்றனர். இந்தியாவிற்கு இது பொற்காலம் என்று கூற விரும்புகிறேன். உலக நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும், இது பொற்காலம்... இந்த வாய்ப்பை வீணடிக்க விடக்கூடாது... இந்த வாய்ப்பை, கனவுகளுடனும், தீர்மானங்களுடனும் முன்னோக்கிச் சென்றால், விக்சித் பாரத் 2047ன் இலக்கை சாதிக்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  • Independence Day 2024 Live : 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீட்பு

    நாட்டில் சுமார் 25 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து மீட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் பெருமிதமாக கூறினார்.

  • Independence Day 2024 Live : விண்வெளித்துறைக்கு முக்கியத்துவம் - பிரதமர் மோடி அறிவிப்பு

    பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "விண்வெளித் துறை ஒரு முக்கிய அம்சம். இந்தத் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம். இன்று, பல ஸ்டார்ட்அப்கள் இந்தத் துறையில் நுழைகின்றன. மாறி வரும் விண்வெளித் துறையானது இந்தியாவை உருவாக்குவதற்கு இன்றியமையாத அங்கமாகும். ஒரு சக்திவாய்ந்த தேசம், நீண்ட கால யோசனையுடன் இந்தத் துறைக்கு பலம் கொடுத்து வருகிறோம்" என பேசினார்

  • Independence Day 2024 Live : தேசத்துக்காக சீர்த்திருத்தங்களை செய்கிறோம் - பிரதமர் மோடி

    எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதால், நாங்கள் பெரிய அளவிலான சீர்த்திருத்தங்களை செய்துகொண்டிருக்கிறோம். இந்த சீர்த்திருத்தங்கள் எல்லாம் வெறும் செய்திகளுக்காகவோ அல்லது சில நாட்கள் பாராட்டுக்காகவோ அல்ல. எந்தவொரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் நாங்கள் சீர்த்திருத்தங்கள் செய்யவில்லை. வளர்ச்சிக்காக சீர்த்திருந்தங்களை செய்கிறோம். நாடு தான் முக்கியம் என பிரதமர் மோடி பேசினார். 

  • Independence Day 2024 Live :  ஆட்சி, நீதி அமைப்பில் சீர்த்திருந்தங்கள் தேவை - பிரதமர் மோடி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    "விக்சித் பாரத் 2047 க்கு, நாங்கள் நாட்டு மக்களிடமிருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது. அரசுக்கு வந்திருக்கும் பல பரிந்துரைகள் நம் நாட்டு குடிமக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை பிரதிபலிக்கின்றன. சிலர் இந்தியாவை திறன் தலைநகராக மாற்ற பரிந்துரைத்தனர், மேலும் சிலர், இந்தியாவை ஒரு உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று கூறினர். நாடு தன்னிறைவு பெற வேண்டும் என்றும், ஆட்சி மற்றும் நீதி அமைப்பில் சீர்திருத்தங்கள் வேண்டும் என்றும் கோரியிருந்தனர். கிரீன்ஃபீல்ட் நகரங்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு, இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையம் - இவையே குடிமக்களின் கோரிக்கைகளாக இருந்தது. தேசத்திற்கு இவ்வளவு பெரிய கனவுகள் உள்ளன." என கூறினார்.

     

  • Independence Day 2024 Live : சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தினோர் - பிரதமர் மோடி உரை

    டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் பிரதமர் மோடி, " கொரோனா காலத்தை எப்படி மறக்க முடியும்? உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நமது நாடு தடுப்பூசிகளை மிக வேகமாக வழங்கியது. இதே நாட்டில் தான் பயங்கரவாதிகள் வந்து எங்களை தாக்கினார்கள். நாட்டின் ஆயுதப் படைகள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தும்போது, வான்வழித் தாக்குதல் நடத்தும்போது, நாட்டின் இளைஞர்கள் பெருமிதம் கொள்கின்றனர். அதனால்தான் நாட்டின் 140 கோடி குடிமக்களும் இன்று பெருமை கொள்கிறார்கள்." என பேசினார்.

  • Independence Day 2024 Live : வளர்ச்சியை நோக்கி இந்தியா

    டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் பிரதமர் மோடி, "ஜல்ஜீவன் திட்டம் மூலம் 15 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உற்பத்தி என்ற சூழலை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் பல்வேறு சீர்த்திருத்தங்களை கொண்டு வர இருக்கிறோம். மிகபெரிய முடிவுகளை எடுப்பேன்" என கூறினார்.

  • Independence Day 2024 Live : 2047ல் இந்தியா வளர்ந்த நாடாகும் - பிரதமர் மோடி உரை

    டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் பிரதமர் மோடி, "40 கோடி மக்களின் ரத்தத்தை சிந்தி இந்தியாவில் இருந்து காலனி ஆதிக்கத்தை வேரோடு பிடுங்கி எறிந்தார்கள். இன்று நாம் 140 கோடி மக்களாக இருக்கிறோம், தீர்மானித்து ஒன்றாகச் சென்றால். 2047-க்குள் எல்லா தடைகளையும் தாண்டி நாம் 'விக்சித் பாரத்' ஆக முடியும்." என கூறினார்.

  • Independence Day 2024 Live : வயநாடு மக்கள் மீது அனுதாபம் - பிரதமர் மோடி உரை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் பிரதமர் மோடி, "இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் நாட்டின் பல இடங்களில் இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துக்களையும் இழந்துள்ளனர்; தேசமும் இழப்புகளை சந்தித்துள்ளது. இன்று, எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவருக்கும், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கும் என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்."என கூறினார். 

     

  • Independence Day 2024 Live : தியாகிகளுக்கு வீரர்களுக்கு வீர வணக்கம் - பிரதமர் மோடி உரை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நாட்டின் சுதந்திர தினத்துக்காக பாடுபட்டு உயிர்நீத்த அனைத்து தியாகிகளுக்கும் இந்நாளில் வீர வணக்கம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

     

  • Independence Day 2024 Live : பிரதமர் நரேந்திர மோடி உரை தொடங்கியது

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்

     

  • Independence Day 2024 Live : முப்படைகளின் அணிவகுப்பு

    டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது.

  • Independence Day 2024 Live : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

    டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றினார்

  • Independence Day 2024 Live : செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வருகை

    நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை தயார் நிலையில் உள்ளது. தேசியக்கொடி ஏற்றுவதற்கு பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வருகை தந்துள்ளார்.

  • Independence Day 2024 Live : பிரதமர் மோடி மரியாதை

    78வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தினார். 

  • Independence Day 2024 Live : பாதுகாப்பு பணியில் ஸ்னைப்பர்கள்

    செங்கோட்டையில் பிரதமர் மற்றும் பிற விவிஐபி விருந்தினர்களின் பாதுகாப்பிற்காக ஸ்னைப்பர்கள், உயரடுக்கு ஸ்வாட் கமாண்டோக்கள் மற்றும் ஷார்ப்ஷூட்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். டெல்லி முழுவதும் 700 AI அடிப்படையிலான முக அடையாளம் காணும் CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட பான்-டில்ட்-ஜூம் அம்சங்களைக் கொண்டுள்ளன, இது ஒரு நபரை தூரத்திலிருந்தும் அடையாளம் காணும் 

  • Independence Day 2024 Live : டெல்லி முழுவதும் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

    நாட்டின் 78வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முகம் அடையாளம் காணும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட இருக்கிறது. அத்துடன் டிரோன் கேமராக்களும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

  • Independence Day 2024 Live : 11வது முறையாக தேசியக்கொடி ஏற்றும் பிரதமர் மோடி

    டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதனையொட்டி டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link