Karnataka Election 2023 Live Voting: கர்நாடக தேர்தல் 2023: மதியம் 3 மணி வரை 52.03% வாக்குப்பதிவு

Wed, 10 May 2023-4:28 pm,

Karnataka Election 2023 Live Voting Updates and News: நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களாலும், சாமனியர்களாகும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு குறித்து உடனடித் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

Karnataka Election 2023 Live Voting Updates and News: கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பரப்புரை கடந்த திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தத் தேர்தலில் பலமுனை போட்டி இருப்பதால், முக்கிய அரசியல் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகள் இதில் முன்னணியில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. அடுத்தாண்டு, மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆளும் முக்கிய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். 


தென்னிந்தியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த கர்நாடகாவை கைப்பற்றுவது பாஜகவுக்கு மிகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கர்நாடகா தேர்தல் மூலம் புத்துணர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது. மேலும், இந்த தேர்தலில் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான ஜேடி (எஸ்) கட்சியும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்களாலும், சாமனியர்களாகும் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கிய கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு குறித்து உடனடித் தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம். 


மேலும் படிக்க | போர்க்களமாய் பரபரப்பின் உச்சத்தில் கர்நாடக சட்டமன்றத் தொகுதிகள்! வெற்றி யாருக்கு?


மேலும் படிக்க | Karnataka Voting Day: நம்பிக்கையுடன் முன்னேறும் காங்கிரஸ்! பதற்றத்தில் பாஜக


மேலும் படிக்க | கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜேடிஎஸ் மீண்டும் கிங்மேக்கரா? சரியும் பாஜக! அள்ளும் காங்கிரஸ்

Latest Updates

  • அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் தலைவர் ஷெட்டர் நம்பிக்கை 

    "மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் எங்களுக்காக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்” என்று காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் ஷெட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • அதிகபட்சமாக ராமநகரில் 63.36 சதவீத வாக்குகள் பதிவு: 

    கர்நாடக தேர்தல் 2023 நேரடி அறிவிப்புகள்: காலை 7 மணிக்கு தொடங்கிய எட்டு மணி நேர வாக்குப்பதிவில், ராமநகராவில் அதிகபட்சமாக 63.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே (பிபிஎம்பி) தெற்கு எல்லையில் (பெங்களூருவின் ஒரு பகுதி) குறைந்த அளவு அதாவது 40.28 சதவீதம் வாக்குப்பதிவு மட்டும் பதிவாகியுள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • கர்நாடகா தேர்தல் 2023 நேரடி ஒளிபரப்பு: தேர்தல் அதிகாரி தாக்கப்பட்டதில் 23 பேர் கைது

    விஜயபுரா மாவட்டத்தில் உள்ள மசபினாலா கிராம மக்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) ஏற்றிச் சென்ற தேர்தல் பணி வாகனத்தை தடுத்து, அதிகாரி ஒருவரை தாக்கி, கட்டுப்பாட்டு மற்றும் வாக்குச் சீட்டு இயந்திரங்களை சேதப்படுத்தியதைத் தொடர்ந்து 23 பேர் கைது செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்காக முன்பதிவு செய்யப்பட்ட இவிம் மசினை எடுத்துச் சென்ற அதிகாரியின் வாகனத்தை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, தலா இரண்டு வாக்குச் சீட்டு இயந்திரத்தையும் மூன்று VVPAT-களையும் சேதப்படுத்தினர்.

  • கர்நாடக சட்டசபை தேர்தலில் பல சினிமா நட்சத்திரங்கள் வாக்களித்தனர்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கர்நாடக தேர்தல் 2023: பல பிரபலங்கள் வாக்களிக்க மறக்கவில்லை. ரிஷப் ஷெட்டி முதல் பிரகாஷ் ராஜ் வரை அனைவரும் வாக்களித்தனர். 'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி தனது பாரம்பரிய உடையில் வந்து வாக்களித்தார்.

    பிரகாஷ் ராஜ் வாக்களித்த பிறகு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். "நாம் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். கர்நாடகா அழகாக இருக்க வேண்டும்" என்று வாக்களித்த பின்னர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

    பெங்களூரு ஆர்ஆர் நகரில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க கன்னட நடிகர் கணேஷ் தனது மனைவியுடன் வந்தார்.

  • சிவாஜிநகர் தொகுதி: பலரது பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பெங்களூரு நகர்ப்புறத்தின் சிவாஜிநகர் தொகுதியில், வாக்களிக்க வந்த பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. 

     

  • கர்நாடகா தேர்தல் 2023

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கன்னட நடிகர் துருவா சர்ஜா பெங்களூருவில் இன்று வாக்களித்தார்.

     

  • இன்று (மே 10, புதன்கிழமை) மாலை கருத்துக் கணிப்பு வெளியாகும்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு இன்று (மே 10, புதன்கிழமை) மாலை வெளியாக உள்ளது. புதன்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 37.25% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    2018 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை. முடிவுகளுக்குப் பிறகு, 224 பேர் கொண்ட ஒரு அவையில் 104 எம்எல்ஏக்களுடன், தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்க பிஜேபி அழைக்கப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் மற்றும் ஜேடி(எஸ்) ஒன்றிணைந்து 116 எம்எல்ஏக்களுடன் (காங்கிரஸ் 76, ஜேடி- எஸ் 37 மற்றும் மூன்று சுயேச்சைகள்) ஆட்சி அமைத்தனர். ஆனால் ஒரு வருடத்திற்குள், ஆட்சி தலைகீழாக மாறியது.

  • கர்நாடக தேர்தல் 2023: வொக்கலிக மடத்தின் தலைவர் நிர்மலானந்த சுவாமிகள் வாக்களித்தார்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கர்நாடக மாநிலம் நாகமங்கலா மாவட்டத்தில் வொக்கலிகா மடத்தின் தலைவர் நிர்மலானந்த சுவாமிஜி வாக்களித்தார்.

     

  • காங்கிரஸ் மூத்த தலைவர் கே சித்தராமையா வாக்களித்தார்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கர்நாடகாவின் வருணா சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கே சித்தராமையா வாக்களித்தார்.

  • கர்நாடகாவில் வாக்குச் சாவடிகளில் இருவர் பலி:

    வாக்குப்பதிவின் போது இரண்டு வாக்காளர்கள் உயிரிழந்தனர். பெலகாவி மாவட்டத்தில் உள்ள சாவடியில் வரிசையில் நின்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில், பேலூரில் உள்ள சிக்கோல் என்ற இடத்தில் வாக்களித்த சில நிமிடங்களில் ஜெயன்னா (49) என்பவர் உயிரிழந்தார்.

  • ஹெச்.டி. ரேவண்ணாவுக்குத்தான் பெருமை சேர வேண்டும்: ஜேடி(எஸ்) தலைவர் எச்.டி.தேவகவுடா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    #WATCH | இது ஒரு சிறிய கிராமம். இங்கு அனைத்து வளர்ச்சியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹெச்.டி. ரேவண்ணாவுக்குத்தான் பெருமை சேர வேண்டும் என்று ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹரடனஹள்ளியில் தனது சொந்த கிராமத்தில் வாக்களித்த ஜேடி(எஸ்) தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

     

  • குடும்பத்துடன் வந்து வாக்களித்த எம்பி டிவி சதானந்த கவுடா:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    எம்.பி.யும், முன்னாள் முதல்வருமான டி.வி.சதானந்த கவுடா பெங்களூரில் உள்ள டாலர்ஸ் காலனியில் வாக்களித்தார். அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து வாக்களித்தார்.

  • பிரச்சினைகளை மனதில் வைத்து அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும்: கன்னட நடிகர் கிச்சா சுதீப்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    #WATCH | ஒருவர் தங்கள் பிரச்சினைகளை மனதில் வைத்து அதற்கேற்ப வாக்களிக்க வேண்டும். நான் இங்கு ஒரு பிரபலமாக வரவில்லை, இந்தியனாக இங்கு வந்துள்ளேன். வாக்களிப்பது எனது பொறுப்பு என கன்னட நடிகர் கிச்சா சுதீப் வாக்களித்த பின் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். 

     

  • முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவேகவுடா தனது வாக்கை செலுத்தினார்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜேடி(எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமருமான ஹெச்.டி.தேவேகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோர் ஹாசனில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

     

  • கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: யாருடனும் கூட்டணி கிடையாது -காங்கிரஸ்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    காங்கிரஸ் ஜேடிஎஸ் (Janata Dal Secular) உடன் கூட்டணி அமைக்க மாட்டோம்: கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் திட்டவட்டம்.

     

  • மனவளர்ச்சி குன்றிய பெண் முதல் முறையாக வாக்களித்தார்.

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மான்வி தாலுகாவின் பொட்னல் கிராமத்தில் அக்ஷதா தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

  • Karnataka Election 2023 Live Voting: மதியம் 1 மணி நிலவரம்

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மதியம் 1 மணிவரையிலான வாக்குப்பதிவு நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.   

  • Karnataka Election 2023 Live Voting: குடும்பத்துடன் வாக்கு செலுத்திய சிவராஜ்குமார்

    கன்னட நடிகர் சிவராஜ்குமார், அவரது மனைவியும், காங்கிரஸ் தலைவருமான கீதா சிவராஜ்குமார் ஆகியோர் பெங்களூருவில் அவர்களது வாக்குகளை பதிவு செய்தனர். 

  • முன்னாள் முதல்வர் சித்தராமையா வாக்களித்தார்:

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    இன்று காலை மைசூரில் இருந்து வந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, சித்தராமன் ஹுண்டி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அதற்கு முன்னதாக கிராமத்தில் உள்ள சித்தராமேஸ்வரர் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்தார்.

  • Karnataka Election 2023 Live Voting: ஆட்டோ ஓட்டிய கர்நாடக காங்கிரஸ் தலைவர்!

    கர்நாடக காங்கிரஸ் தலைவரும், கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளருமான டி.கே.சிவக்குமார், அத்தொகுதியில் ஆட்டோ ஓட்டிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை இங்கு காணலாம்.

  • வீட்டுக்கு ஒரு கோழி, மது பிரியர்களுக்கு இரண்டு டெட்ரா பாக்கெட் சாராயம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ரெய்ச்சூரில் வாக்குப்பதிவுக்குப் பிறகு சிக்கன், ஆல்கஹால் டெட்ரா பேக் விநியோகம் செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீட்டுக்கு ஒரு கோழி, மது பிரியர்களுக்கு இரண்டு டெட்ரா பாக்கெட் மதுபானங்கள் விநியோகம்.  இந்த சம்பவம் நடந்துள்ளது ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகாவில் உள்ள குர்தி பகுதியில் நடந்துள்ளது. காலை முதல் வாக்காளர்களுக்கு டெட்ரா பாக்கெட் கோழிக்கறி, மதுபானம் விநியோகம் செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டி உள்ளது.  இது குறித்து தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

  • Karnataka Election 2023 Live Voting: கடமை முக்கியம் கண்ணா...

    மைசூரு தொகுதியில், மணமக்கள் தங்கள் திருமணம் முடிந்த கையோடு வாக்குச்சாவடி வந்து வாக்குச்செலுத்திய சம்பவம் நடந்துள்ளது. 

  • கடந்த தேர்தலை விட குறைவு

    2018ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 72.36 சதவீதம் வாக்குகள் பதிவாகின. குறிப்பாக, 2018 தேர்தலில் இதேபோன்று காலை 11 மணியளவில், 24 சதவீதம் பதிவாகியிருந்தது. தற்போது சுமார் 21 சதவீதமே பதிவாகியுள்ள நிலையில், வாக்குப்பதிவில் மந்தநிலை ஏற்பட்டுள்ளதா கேள்விகள் எழுந்துள்ளன. 

  • காலை 11 மணி நிலவரம்

    தற்போது, வாக்குப்பதிவில் 11 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Karnataka Election 2023 Live Voting: வாக்குச் செலுத்த வந்த காந்தாரா நடிகர்!

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், கன்னட நடிகரான ரிஷப் ஷெட்டி உடுப்பி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் அவரது வாக்கினை செலுத்தினார். 

  • Karnataka Election 2023 Live Voting: 'கிங் மேக்கர் இல்லை கிங்...'

    மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி வாக்குச் செலுத்திய பின் கூறுகையில்,"ஜேடிஎஸ் வேட்பாளர்கள் சரியான வளர்ச்சியைப் பெற மக்களை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் கட்சி தான் கிங்" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: 'தேர்தலில் பேட்டியிட மாட்டேன், ஆனால்...' - சித்தராமையா

    வாக்கு செலுத்திய பின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில்,"வாக்காளர்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. நான் 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவேன். காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும். நான் ஓய்வு பெறப் போவதில்லை ஆனால் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இது எனது கடைசி தேர்தல்" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: வாக்குச் செலுத்திய உபேந்திரா

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நடிகர் உபேந்திர ராவ் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். 

  • Karnataka Election 2023 Live Voting: 'நாட்டின் எதிர்காலமும் இருக்கிறது'

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு செலுத்த வந்த முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, "காங்கிரஸ் கட்சிக்கு 130க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். 150 இடங்கள் வரை உயரலாம் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். மேலும், உங்களுக்காக உழைக்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலில் இந்த நாட்டின் எதிர்காலமும் சம்பந்தப்பட்டிருக்கிறது" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: 'காங்கிரஸ் பூஜை செய்வதை வரவேற்கிறோம்'

    வாக்கு செலுத்திய பின் பேசிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா,"பஜ்ரங் பாலியின் பூமியான கர்நாடகா இவை அனைத்திற்கும் மே 13ஆம் தேதி பதில் இருக்கிறது. டி.கே. சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எல்பிஜி சிலிண்டர்களுக்கு பூஜை செய்வதை வரவேற்கிறோம், குறைந்தபட்சம் காங்கிரஸார் ஏதாவது பூஜை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: காலை 9 மணி நிலவரம்

    கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், தற்போது 9 மணி நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் காலை 9 மணிவரை 8.26 சதவீதம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  • Karnataka Election 2023 Live Voting: காங்கிரஸ் கட்சிக்கு 141 இடங்கள் கிடைக்கும்...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    கர்நாடக காங்கிரஸ் தலைவரும், கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளருமான டி.கே.சிவக்குமார் கூறுகையில்,"இன்று இளம் வாக்காளர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் மாற்றத்திற்காக வாக்களிப்பார்கள். மாநிலத்தில் விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் பற்றி அவர்களுக்கு தெரியும். நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள் ஒரு மாற்றத்தை வேண்டி, எங்களுக்கு 141 இடங்களை கொடுப்பார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று நான் நம்புகிறேன். இதை அவர் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் அளித்த பேட்டியில் கூறினார். 

     

  • Karnataka Election 2023 Live Voting: சாதனை வெற்றி... முதலமைச்சர் நம்பிக்கை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    நான் வாக்களித்து ஜனநாயகத்திற்காக எனது கடமையை செய்துள்ளேன். எனது தொகுதியில் வாக்களிப்பது ஒரு பாக்கியம். பெரும் வாக்கு வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெறுவேன். கர்நாடக மக்கள் நேர்மறையான வளர்ச்சிக்காக வாக்களிப்பார்கள், பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும்.

     

  • Karnataka Election 2023 Live Voting: வாக்களித்தார் முதலமைச்சர்

    கர்நாடக முதலமைச்சரும், ஷிகோன் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளருமான பசவராஜ் பொம்மை அங்குள்ள வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

  • Karnataka Election 2023 Live Voting: முதலமைச்சர் வழிபாடு

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக தேர்தலில் வாக்களிக்கும் முன் காவேரியில் உள்ள காயத்ரி கோவிலில் வழிபாடு செய்தார். அதன் காட்சிகளை இங்கு காணலாம். 

  • Karnataka Election 2023 Live Voting: 'முதலில் வாக்களியுங்கள்...'

    பெங்களூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்த பின், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்,"முதலில், நீங்கள் வாக்களியுங்கள், பிறகு இது நல்லது, இது கெட்டது என்று சொல்லலாம், ஆனால் வாக்களிக்காவிட்டால் விமர்சிக்க நமக்கு உரிமை இல்லை" என்றார்.

  • Karnataka Election 2023 Live Voting: பஜ்ரங் தள் குறித்து நிர்மலா சீதாராமன்

    பெங்களூரில் தனது வாக்கை செலுத்திய பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்,"நாங்கள் எப்போதும் ஹனுமான் சாலிசாவைப் படித்து ஹனுமானை பிரார்த்தனை செய்கிறோம், ஆனால் அவர்கள் (காங்கிரஸ்) தேர்தலின் போது இதைச் செய்கிறார்கள்... அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தள் அமைப்பு தடை செய்யப்படும் என குறிப்பிட்டது அவர்களின் முட்டாள்தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: மீண்டும் பாஜகதான்... எடியூரப்பா

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் மோற்கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா,"பி.ஒய்.விஜயேந்திரா இங்கு 40,000 வாக்குகளுக்கு மேல் பெறப் போகிறார். அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

    மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது. மக்கள் அனைவரும் விரைவாக சென்று வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று நான் 100% உறுதியாக நம்புகிறேன். 75-80%க்கும் அதிகமானோர் பாஜகவை ஆதரிப்பார்கள். நாங்கள் 130-135 இடங்களில் வெற்றி பெறுவோம்" என்றார். 

  • Karnataka Election 2023 Live Voting: நிர்மலா சீதாராமன் வாக்குப்பதிவு

    பெங்களூரு நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்த வந்தார். 

  • Karnataka Election 2023 Live Voting: நட்சத்திர வேட்பாளர் - விஜயேந்திரா

    முன்னாள் முதலமைச்சரான எடியூரப்பா 7 முறை வெற்றிபெற்ற தொகுதி, ஷிகாரிபுரா. இத்தொகுதியை அவரது மகன் பி.ஒய். விஜயேந்திராவுக்கு பாஜக தற்போது ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், ஷிகாரிபுரா பகுதியில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் எடியூரப்பா, விஜயேந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று காலை சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

  • Karnataka Election 2023 Live Voting: நட்சத்திர வேட்பாளர் - ஜெகதீஷ் ஷெட்டர்

    தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வரும், லிங்காயத் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்பள்ளி - தார்வார்டு சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். மகேஷ் தெங்காய் 1994 முதல் தொடர்ந்து 6 முறை பாஜகவுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள அங்கு போட்டியிட்டுள்ளார்.

  • Karnataka Election 2023 Live Voting: நட்சத்திர வேட்பாளர் - ஹெச்.டி.குமாரசாமி 

    பழைய மைசூரு பகுதியில் உள்ள JD(S) கட்சியின் கோட்டை என கருதப்படும் தொகுதி, சென்னபட்ணா. முன்னாள் முதலமைச்சரும்,    JD(S) கட்சித் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி தொகுதியை தக்கவைக்க இங்கு போட்டியிடுகிறார். சிபி யோகேஸ்வரா தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளராக எஸ். கங்காதர் உள்ளார். 

  • Karnataka Election 2023 Live Voting: நட்சத்திர வேட்பாளர் - சித்தராமையா

    காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, சாமாராஜநகர் மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் மிகவும் பிரபலமான லிங்காயத் தலைவர் சோமண்ணாவை களமிறக்கியுள்ளது.

  • Karnataka Election 2023 Live Voting: நட்சத்திர வேட்பாளர் - முதலமைச்சர் பசவராஜ் பொம்மை

    கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியில் யாசிர் அகமது கான் பதான் போட்டியிடுகிறார்.

  • Karnataka Election 2023 Live Voting: வரிசையில் நின்று வாக்களித்த பிரகாஷ் ராஜ்

    நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின் பேசிய அவர்,"நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராகவும், 40சதவிகித ஊழலுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளேன். நீங்களும் உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்" என மக்களுக்கு வேண்டுகோள்

  • Karnataka Election 2023 Live Voting: வாக்குப்பதிவு தொடக்கம்

    கர்நாடக மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக, மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 223 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஹெச்.டி. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 இடங்களில் போட்டியிடுகிறது, மேலும் ஏழு இடங்களில் மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கிறது. இந்நிலையில், கர்நாடகா சட்டப்பேரவையில் 224 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

  • Karnataka Election 2023 Live Voting: வாக்குப்பதிவுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்?

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வாக்களிக்க, தனிநபர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதாரை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் அடையாளத்தைத் தவிர, வாக்காளர்கள் இந்த 12 ஆவணங்களில் ஒன்றை வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தலாம்.

    ஆதார் அட்டை, MNREGA வேலை அட்டை, வங்கி/அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள், தொழிலாளர் அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு, இந்திய பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆவணம் புகைப்படம், மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனங்கள்/பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சேவை அடையாள அட்டைகள், MPகள்/MLAகள்/MLCக்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் மற்றும் தனிப்பட்ட ஊனமுற்றோர் அடையாள அட்டை (UDID) அட்டை.

  • Karnataka Election 2023 Live Voting: உங்கள் வாக்குச் சாவடியை எப்படிக் கண்டுபிடிப்பது?

    இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிமுகப்படுத்திய சுனாவ் செயலி, வாக்குச் சாவடிகளின் இருப்பிடங்கள், நிகழ்நேர வரிசை, அவசரகால வசதிகள், அருகில உள்ள சக்கர நாற்காலி வசதிகள் மற்றும் பல விவரங்களைப் பெற வாக்காளர்களுக்கு உதவும். உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை நீங்கள் அதில் டைப் செய்யும்பட்சத்தில், உங்கள் வாக்குச் சாவடியின் இருப்பிடத்தை அந்த ஆப் காண்பிக்கும்.

  • Karnataka Election 2023 Live Voting: மொத்த வாக்காளர்கள், வேட்பாளர்கள்

    கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 545 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 224 தொகுதிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link