கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜேடிஎஸ் மீண்டும் கிங்மேக்கரா? சரியும் பாஜக! அள்ளும் காங்கிரஸ்

Karnataka Assembly Elections 2023: கர்நாடக சட்டசபை தேர்தலில் கருத்துக் கணிப்புகளும், கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்த கருத்துக்களும்...

 

2023-ம் ஆண்டுக்கான கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அதற்கான களம் தயாராகிவிட்டது. கர்நாடகாவில் மே 10-ம் தேதி வாக்களிக்கும் அதே வேளையில், 224 இடங்களைக் கொண்ட மாநில சட்டசபைக்கான முடிவுகள் மே 13-ம் தேதி அறிவிக்கப்படும். 

மேலும் படிக்க | Karnataka Election 2023: கர்நாடக தேர்தலில் ஹனுமானுக்கு அரசியல் கட்சிகள் செய்யும் கைங்கர்யம்

1 /8

கர்நாடக சட்டசபை தேர்தல் 2023 கருத்துக்கணிப்புகளில்: காங்கிரஸ் முன்னேற்றம் கண்டால், பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படும் என்று ஆரூடங்கள் சொல்லப்பட்டால், ஜேடிஎஸ் மீண்டும் கிங்மேக்கர் ஆகும் என்றும் நம்பப்படுகிறது. 

2 /8

பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாஜகவும் காங்கிரஸும் வாக்காளர்களைக் கவர எந்தவொரு முயற்சியையும் விட்டுவிடவில்லை. மறுபுறம், ஜேடிஎஸ் தனது செல்வாக்கை மைசூர் பகுதிக்கு அப்பால் விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் பல்வேறு விதமாய் வந்துள்ளன.

3 /8

கருத்துக் கணிப்பு பகுப்பாய்வு சில கருத்துக் கணிப்புகளில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக உள்ளன. எனவே தேர்தல் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /8

ஜீ நியூஸ்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு பாஜக: 103-115 | காங்கிரஸ் 79-91 | JD(S) 26-36 | மற்றவை 1-3

5 /8

ஈடினா கருத்துக் கணிப்பு பாஜக 57-65 | காங்கிரஸ் 32-140

6 /8

இந்தியா டுடே-CVoter பாஜக 74-86 | காங்கிரஸ் 107-119 | JD(S): 23-35    

7 /8

ABP News-CVoter கருத்துக் கணிப்பு பாஜக 74-86 | காங்கிரஸ் 107 - 119 | JD(S) 23-35

8 /8

ஏசியாநெட் - ஜன் கி பாத் சர்வே பாஜக 100-114 | காங்கிரஸ் 86-89 | ஜேடிஎஸ் 20-26 | மற்றவை 0-5.