Manipur Election Results 2022 Live Updates: பாஜக 14 இடங்களில் முன்னிலை
Manipur Election Results 2022 Live Updates: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தளில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தின் 60 தொகுதிகளுக்கான முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக மணிப்பூரில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
2017 தேர்தலில், காங்கிரஸ் 28 இடங்களிலும், பிஜேபி 21 இடங்களிலும் வென்றன. ஆனால் பிஜேபி NPP, NPF மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.
இந்தமுறை மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சரும் பாஜக வேட்பாளருமான என் பிரேன் சிங், சட்டமன்ற சபாநாயகர் ஒய் கேம்சந்த் சிங், துணை முதல்வரும் என்பிபி வேட்பாளருமான யும்னம் ஜாய்குமார் மற்றும் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் என் லோகேஷ் சிங் ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்கள்.
Latest Updates
மணிப்பூர் தேர்தல் முடிவுகள் நேரலை:
பாஜக தற்போது 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது.தற்போது பாஜக 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது:
சந்தேல் சுராசந்த்பூர் ஹெய்ங்காங் ஹெய்ரோக் ஹெங்லெப் ஜிரிபாம் காங்போக்பி கரோங் கெய்ராவ் குரை லிலோங் நம்போல் நுங்பா புங்யார் சகோல்பாண்ட் தமெங்லாங் தங்க வாங்கேம்மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகள்:
கங்காபோக் குந்த்ரக்பம் லாங்தபால் சைகோட் தௌபல் உக்ருல் வப்காய்
பாஜகவின் 20 இடங்களில் காங்கிரஸ் 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.மணிப்பூர் தேர்தல் முடிவுகள்: மீண்டும் கிங்மேக்கர்களாகும் NPP மற்றும் NPF?
ஐந்து மற்றும் மூன்று இடங்களில் முன்னணியில் உள்ள NPP மற்றும் NPF ஆகியவை, BJP அல்லது காங்கிரஸ் பெரும்பான்மை பெறவில்லை என்றால், இந்த கட்சிகள் கிங் மேக்கர் ஆகலாம். தற்போது பாஜக 16 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.மணிப்பூரில் பாஜக முன்னிலையில்:
மணிப்பூரில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் பாஜக 11 இடங்களிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. மணிப்பூரில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்பு மற்றும் கோவிட்-19 நெறிமுறைகளுடன் தொடங்கியது.பாஜக 7 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை:
குரை, ஹீரோக், சந்தேல், ஹீங்காங், புங்யார், சகோல்பந்த், தங்கா ஆகிய இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. தங்கமெய்பந்தில் ஜேடி(யு) முன்னிலை வகிக்கிறது. காங்கிரசில் தௌபால், வாப்காய், லாங்தபால், கங்காபோக் உள்ளது.மணிப்பூர் தேர்தல் முடிவுகள் நேரடி அறிவிப்புகள்:
ஹீரோக்கில் பாஜக முன்னிலை வகிக்கிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேரடி அறிவிப்புகள்: தௌபல் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் இபோபி சிங் முன்னிலை.
முதற்கட்ட புள்ளி விவரங்கள் பாஜக 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது
மணிப்பூரில் தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆரம்ப எண்ணிக்கையில் பாஜக நான்கு இடங்களிலும் காங்கிரஸ் மூன்று இடங்களிலும் மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.